search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India England"

    • நடப்பு டி20 தொடரில் ஏழு போட்டிகளில் 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார்.
    • இதில் இரண்டு முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

    ஜார்ஜ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து 16.4 ஓவரில் 103 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

    இந்த டி20 தொடரில் 35 வயதான முன்னாள் கேப்டன் கோலி, ஏழு போட்டிகளில் 10.71 சராசரியில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில் விராட் பார்ம் ஒரு பிரச்சனை இல்லை. அவர் அதை இறுதிப்போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    விராட் ஒரு தரமான வீரர். அவரது திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. 15 வருடங்கள் விளையாடும் போது, பார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அவர் அதை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம்.

    இறுதிப் போட்டியின் சந்தர்ப்பத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். ஏனெனில் இது உங்களுக்கு நல்ல முடிவுகளை எடுக்க உதவுகிறது. நாங்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் இருந்தோம். அதுவே எங்களுக்கு முக்கியமாகும். எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம். இறுதிப்போட்டியில் இன்னொரு சிறப்பான ஆட்டத்தை நடத்துவேன் என்று நான் நம்புகிறேன்.

    ×