search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Air Force"

    • பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​இந்த விபத்து நடந்துள்ளது.
    • மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல.

    மிக்-29 போர் விமானம், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது எனவும் விபத்தின் போது விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.

    இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வி்மானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

    இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.

    வி்மானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.

    இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது - நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்ப்பு.
    • பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு.

    சென்னை:

    இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காணும் பொங்கல் தினத்தில் மேற்கொள்வது போன்று மெரினா கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க வருகிற 6-ந்தேதி தடை விதிக்கப்பட உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், காலையில் இருந்தே மக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    விமான சாகச நிகழ்ச்சியையொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

    இந்த நிலையில் இன்று 72 விமானங்கள் பங்கேற்கும் பிரமாண்ட ஒத்திகை நடைபெற்றது. 6-ந் தேதி விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும்போது பங்கேற்ற்கும் அத்தனை விமானப் படை விமானங்களும் ஒத்திகையில் பங்கேற்கின்றன.

    இந்த ஒத்திகை 3 மணிநேரம் 7 பிரிவுகளாக நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது விமானப்படை வீரர்கள் மெய்சிலிர்க்கும் வகையிலும் மயிர்கூச்செரியும் வகையிலும் சாகச நிகழ்ச்சியை செய்து காட்டினர்.


    இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் குடையை பிடித்துக்கொண்டு நின்று கண்டுகளித்தனர்.

    • ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் விமானப்படை துணைத் தளபதியாக உள்ளார்
    • தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி பணி பெறுகிறார்

    இந்திய விமானப்படையின் புதிய தலைமை தளபதியாக தற்போது துணை தளபதியாக உள்ள ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய விமானப்படை தலைமைத் தளபதி விக்ரம் ராம் சவுத்ரி வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அன்றைய தினம் விமானப்படை தளபதி பதவியை அமர் ப்ரீத் சிங் ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    1984 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் சேவை ஆற்றி வரும் ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், 2023 பிப்ரவரி 1 முதல் விமானப்படை துணை தளபதியாக பதவி ஏற்று பணியாற்றி வருபவர் ஆவார். நேஷனல் டிபன்ஸ் அகாடெமியில் [NDA] பயின்ற அமர் ப்ரீத் சிங் பிளைட் கமாண்டர் முதல் காமாண்டிங் ஆபிசர் வரை அனைத்து ரேங் - களையும் வகித்தவர் ஆவார்.

    • இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
    • காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • அப்பாச்சி ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் லடாக் பகுதியில் தரையிறக்கப்பட்டது.

    லடாக்:

    இந்திய விமானப்படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கட்டுப்பாட்டு பேனலில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரை லடாக்கில் அவசரமாக தரையிறக்கினர். அதில் பயணித்த இரண்டு பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
    • விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு பொதுவாக ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. 

    இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

    • ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • ஹெலிகாப்டர் துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்திய வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. போபாலில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் இந்திய வான்படை ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் ஐந்து பேர் பயணம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று பெராசியா காவல் நிலைய கண்காணிப்பாளர் நரேந்திர குலாஸ்த் தெரிவித்தார். போபாலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இந்திய வான்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏரி போபால் விமான நிலையத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. போபால் மற்றும் நாக்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹெலிகாப்டரை சரி செய்துள்ளனர்.

    • இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-ம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதியாக பிளஸ்-2 வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது 2 வருட தொழிற்கல்வி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். இந்த ஆட்சேர்ப்பு 3 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதலாவதாக எழுத்து தேர்வு 13.10.2023 அன்று நடைபெறுகிறது. 2-வதாக உடற்தகுதி தேர்வும், 3-வதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

    இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது
    • மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியக் குடிமகனாக உள்ள திருமணமாகாத ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் (வயது 17½ முதல் 21 வரை) பிறந்திருக்க வேண்டும். 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.

    இணையவழி தேர்வு 13.10.2023 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போகாபூர் கிராமம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×