என் மலர்
நீங்கள் தேடியது "injured"
- பஸ் மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
- மழை பெய்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிராம் மில் அருகே ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் ஆம்புலன்ஸ் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிக்கொண்டு சிவகிரியில் இருந்து சென்றது.
அரசு பஸ்சை ஆம்புலன்சு வேன் முந்த முயன்றபோது எதிரே ஜே.சி.பி. வாகனம் வந்தது. அதன் மேல் மோதாமல் இருப்பதற்காக இடது புறமாக ஆம்புலன்சை டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் முன்னே சென்ற அரசு பஸ் மீது பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 பேர், ஆம்புலன்சில் இருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்காக சென்ற நபரை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மதுரைக்கு அனுப்பி வைத்தனர் .
இந்த விபத்தில் ஆம்பு லன்சில் அமர்ந்திருந்தவர் விபத்தில் சிக்கி மீட்க முடியாத நிலையில் இருந்தார். அவரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சம்பத் (வயது 26), ராம்குமார் (29), சிவகுமாரி (49) ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த பஸ் பயணி பாண்டிச்சேரியைச் சேர்ந்த குணாலும் (27) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் (29), முகமது பாசிக் (25) இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்ததால்இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
- மாடியில் இருந்து தவறி விழுந்த திருடன் படுகாயம் அடைந்தார்.
- தப்பி ஓட முயன்றபோது போது சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் எம்.எம். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). நேற்று அதிகாலை 3 மணியளவில் இவரது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவரின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த கணேசன் எழுந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது அங்கு மர்ம ஆசாமி ஒருவர் கதவு திறந்து உள்ளே வந்து நின்று கொண்டிருந்ததார்.
இதனை கண்ட கணேசன் இதுகுறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த ஆசாமியை பிடிக்க அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனை கண்ட அந்த மர்ம ஆசாமி கணேசன் வீட்டின் மாடியில் ஏறி, அருகே உள்ள வீட்டின் மாடிக்கு தாவி குதித்து தப்பிக்க முயன்றான். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்த மர்ம ஆசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஆசாமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டன. இதையடுத்து அவர் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில், அவர் குன்னம் தாலுகா, மழவராயநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சக்திவேல் (46) என்பது தெரியவந்தது. அவர் கணேசன் வீட்டில் திருடுவதற்தாக வந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- டிராக்டரிலிருந்து விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காத்தான் விடுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது டிராக்டர் மூலம் மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வல்லக்குளம் பகுதியில் உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரையா மகன் தயாநிதி (வயது14) என்ற சிறுவன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிராக்டரின் கலப்பையில் சிக்கி தயாநிதியின் வலது கால் முறிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தயாநிதியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் காயம் அடைந்தார்.
- 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் நரேஷ் (வயது 17). இவர் காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை இடைவேளை நேரத்தில் நரேஷ் தனது நண்பர்களுடன் கழிவறையின் மறைப்பு சுவர் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது மறைப்பு சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில் நரேசுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நரேஷ் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்
- டிரைவரை போலீசார் கைது செய்தனர்
பெரம்பலூர்
சென்னையை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது46). இவரும், இவரது மகள் யாமஸ்ரீ (9) ஆகியோரும் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த காரை சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (50) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே டிப்பர் லாரி ஒன்று சமிக்ஞை செய்யாமல் திடீரென வலது புறத்திலிருந்து இடது புறத்துக்கு திரும்பிய போது அதை பின் தொடர்ந்து வந்த கார், லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் சுந்தர்ராஜ், காரில் பயணம் செய்த பாக்கியராஜ், யாமஸ்ரீ ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த அருண் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாடு குறுக்கே புகுந்ததால் பைக்கில் சென்ற தம்பதி படுகாயம் அடைந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வசந்தம் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா.
சம்பவத்தன்று இவர் கணவர் பாலசண்முகத்துடன், மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். சிலைமான் ெரயில்வே மேம்பாலம்- நான்கு வழிச்சாலை பகுதியில் வந்தபோது மாடு குறுக்கே பாய்ந்தது.
இதில் வாகனம் நிலை தடுமாறி தம்பதியினர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த பாலசண்முகம்- ஜெயசித்ராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெயசித்ரா சிலைமான் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து
- ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்சி காயமடைந்தார்
- 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம்
புதுக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை அருகே கோமாபுரம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மணியம்மை (வயது 65). இவர் வீட்டின் அருகில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் வீதியில் இருப்பதால் அந்த வீதியை ஆலமர தெரு என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் 3 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலையும் எதிர்கொண்டு நிமிந்து நின்றது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிளைகளில் நீர் தேங்கி கனம் தாங்காமல் மிகப்பெரிய ஆலமரக்கிளை ஒன்று மணியம்மை வீட்டின் மீது விழுந்தது. இதில் மணியம்மை காயம் அடைந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்த மணியம்மையை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் ஆல மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கான பாதையை சரி செய்து கொடுத்தனர். ஆலமரத்தின் கிளைகள் பகல் நேரத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.
- கார் மோதி ஒருவர் காயமடைந்தார்
- நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது விபத்து
கரூர்:
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் சம்பவத்தன்று லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப் போது அந்த வழியாக வந்த கார், சரவணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வந்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயமடைந்தார்
- பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது
கரூர்:
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கொடையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் குட்கா பயன்படுத்தியதாகவும், இதை பார்த்த பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததால் கால் ம ற்றும் கையில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
- மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்தவர் கணேசன் மனைவி முத்துசெல்வி . இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்
- மாரியப்பனின் தந்தை சண்முகவேல் பிரச்சினைக்குரிய இடத்தில் எம்.சாண்ட் மணலை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்தவர் கணேசன் மனைவி முத்துசெல்வி (வயது 35). இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார்.
முத்துசெல்விக்கும், அவரது எதிர் வீட்டில் வசிக்கும் மாரியப்பனுக்கும் (42) கடந்த 5 ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் முத்துசெல்வி தனது வீட்டில் கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்தார். இதையடுத்து டிப்பர் லாரியில் எம், சாண்ட் மணல் கொண்டு வரப்பட்டு, வீட்டின் அருகே கொட்டப்பட்டது.
இதற்கு மாரியப்பனின் தந்தை சண்முகவேல் பிரச்சினைக்குரிய இடத்தில் எம்.சாண்ட் மணலை கொட்டக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், அவரது தந்தை சண்முகவேல், மாரியப்பன் மகன் சதீஸ், மகள் சுதா ஆகியோர் சேர்ந்து, முத்துசெல்வியை தாக்கினர். இதுபோல முத்துசெல்வி, அவரது மகன்கள் ஆனந்த், சுரேஷ், முனிஸ் மற்றும் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் சேர்ந்து மாரியப்பனையும், அவரது தந்தை சண்முகவேலையும் தாக்கினர். அத்துடன் மாரியப்பன் தனது வீட்டின் கழிவறை கதவு, கோப்பை, கூரைகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
மோதலில் காயமடைந்த முத்து செல்வி நெல்லை அரசு மருத்துவமனையிலும், சண்முகவேல், மாரியப்பன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த மாரியப்பன், சண்முகவேல், சதீஸ், சுதா, முத்துசெல்வி, ஆனந்த், சுரேஷ், முனிஸ் மற்றும் சுப்பிரமணி ஆகிய 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.
- லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
வெள்ளகோவில் :
கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். காங்கேயம் அடுத்து கொழிஞ்சி காட்டு வலசு பிரிவு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரில் திருச்சியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி வந்த லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனை ஓட்டி வந்த பிரதாப் (வயது 22) மற்றும் வேனில் பயணம் செய்த செரில் (14) ,மேரி (70), ஷருண்(14),மேஜோ (59), கில்சர் (49) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனே அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.