search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inquiry"

    • ரேவதி பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடியை அடுத்த மதனகோபால புரத்தில் உள்ள கோ.சத்தி ரத்தை சேர்ந்தவர் பழனி மகள் ரேவதி (வயது 22). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாட மியில் படித்து வந்தார். ரேவதியின் உறவினர், மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்து பண்ருட்டி யில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று காலை விட்டுச் சென்றார். இரவு வெகுநேரமாகியும் ரேவதி வீடு திரும்பவில்லை.

    அவரது பெற்றோர் ரேவதியை உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ரேவதியின் பெற்றோர் பண்ருட்டி போலீ சாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன மாணவி யை தேடி வருகின்றனர்.

    • பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள்.
    • இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சாராய மேடு கிராமத்ைத சேர்ந்தவர் அரவிந்த். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (5). இவள் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் படித்து வந்தாள். பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள். அதிகாலையில் அவளை பாம்பு கடித்தது. கன்னத்தில் கடித்ததால் சிறுமி கதறினாள்.சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அப்போது சிறுமியை கடித்த பாம்பு அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தாள். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலி ருப்பு தெற்கு தெருவை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் மகள் பிரியா (வயது 25). இவர் கடந்த 3 வருடங்க ளுக்கு முன்பு கடலூர் பெண்கள் கல்லூரில் படித்தார். பின்னர் வீட்டிலிருந்து முந்திரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 29-ந் தேதி 12 மணியளவில் முந்திரி தோப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஞானபிரகாசம் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில், தனது மகள் பிரியா 15 பவுன் நகையுடன் காணாமல் போனதாக கூறி யுள்ளார். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து நகையுடன் காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    • கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்
    • பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர் 3-வது வட்டம்என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் பழனிவேல் (வயது 55). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் முதலாவது சுரங்கம் 1 ஏ பிரிவில் வேலை பார்த்து வந்தார். நேற்று முதலாவது பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். 2-வது வட்டம் மாணிக்கவாசகர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் இறந்தார். விபத்தில் பலியான பழனிவேலுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகளும் இருக்கின்றனர். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

    • விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார்.
    • படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆர்.சி. மேலக்கொந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அணில்குமார் (வயது 21). இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். மேலும், போலீஸ் அதிகாரி தொடர்பான தேர்வு எழுத படித்தும் வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கரைக்க இவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து வீடூர் அணைக்கு சென்றார். அங்கிருந்து இரவு 10 மணியளவில் வீடு திரும்பினார். சாப்பிட்டுவிட்டு படிக்க செல்வதாக வீட்டின் மாடிக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.

    நள்ளிரவு 1 மணியளவில் பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்துள்ளார். அப்போது அணில்குமார் வீட்டின் தோட்டத்தில் உள்ள தேக்குமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். சத்தம்போட்டு அணில்குமாரின் பெற்றோரை பக்கத்து வீட்டுக்காரர் அழைத்தார். அனைவரும் சேர்ந்து அணில்குமாரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த விக்கிர வாண்டி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அணில்குமார் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியா? அல்லது போலீஸ் ஆக முடியவில்லை என்ற ஏக்கமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.
    • மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துபாய் போன்ற வளைகுடா நகரங்களில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் தங்கத்தை அதிகளவில் கடத்துகின்றனர்.

    இதன் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது விமான நிலைய அறை எண்.7-ல் உள்ள கழிவறைக்கு சென்று பார்த்த போது அங்கு சிறிய அளவிலான பார்சல் இருந்தது. சந்தேகமடைந்த அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது.

    இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சமாகும். அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த சிலர் மாலை மதுரையில் இருந்து இலங்கைக்கு புறப்படும் விமானத்தில் பயணம் செய்தனர்.

    அதில் வந்த சிலர் தான் அதிகாரிகளின் கெடு பிடியால் கடத்தி வந்த தங்கத்தை கழிவறையில் போட்டு விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யார்? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜதுரை.

    இவரது மனைவி விஜய லட்சுமி (வயது 45).

    இந்நிலையில், இவர் சாரங்கபாணி கீழ வீதியில் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் பின்னால் அடையா ளம் தெரியாத மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர்.

    மோட்டார் சைக்கிள் சாரங்கபாணி கீழவீதி பெரிய தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 9 பவுன் செயினை மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், சப்-இன்ஸ்பெ க்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தப்பி ஓடிய மர்மநப ர்களை போலீ சார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    • காடாம்புலியூர் போலீசார் விசாரணை
    • உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பண்ருட்டிக்கு வந்தார்? எவ்வாறு காயம் ஏற்பட்டது? என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சின்னசேலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னசேலம் கடைவீதியில் சந்தேகப்படும் படியாக ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. போலீசார் ஆட்டோவை பரிசோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை பார்த்தனர்.

    இது குறித்து ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக தலைவாசல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா (வயது 40), சின்னசேலத்தை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்திவேல் (24), காமராஜ் (45) ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொந்தமாக வாங்கிய இடத்தில் வாலிபர் தீக்குளித்து இறந்தார்.
    • ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் வசித்து வருபவர் வைரமுத்து (வயது 48), டிரைவர். இவர் கடந்த 23 வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கபிலன் (22) வசந்த் (21) என்ற மகன்கள் உள்ளனர்.

    வைரமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் காலனி வசந்தம் நகரில் 4 சென்ட் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் சரிவர வேலை இல்லாததால் வீட்டில் வறுமை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டு மனையை விற்க முடிவு செய்தார். இதனை அறிந்த வைரமுத்துவின் மனைவி முத்துலட்சுமியின் தங்கை பார்வதி தன்னிடம் நிலத்தை விற்குமாறு கேட்டுள்ளார்.

    இதற்கு சம்மதித்த வைர முத்து அந்த இடத்தினை பார்வதிக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இடத்திற்குரிய தொகையை பார்வதி சிறிது சிறிதாக கொடுத்துவந்துள்ளார். இதன் காரணமாக வைர முத்துவிற்கும் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மனைவி தங்கைக்கு ஆதரவாக பேசி யதால் குடும்பத்தில் பிரச் சினை ஏற்பட்டது. இதனால் மனைவி கோபித்து கொண்டு வைரமுத்துவைப் பிரிந்து சென்று தென்காசி மாவட்டம் பொதிகை நகரில் இரு மகன்களுடன் தனியே வசித்து வருகிறார்.

    வீட்டுமனை விற்ற பணமும் முழுமையாக கிடைக்காததாலும், மனைவி, மகன்கள் பிரிந்து சென்றதாலும் வைரமுத்து மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற வைரமுத்து அங்கு வந்திருந்த தனது இரு மகன்களிடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பேசவில்லை என கூறப்படுகிறது. இதனால் வைரமுத்து மன வேதனைக்கு ஆளானார். இது குறித்து தனது தாய் மற்றும் உறவிரகளிடம் கூறி மனவேதனையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    மேலும் தனது தாயிடம் , குடும்பம் இந்த நிலைமைக்கு ஆனதற்கு காரணம் அந்த வீட்டுமனை தான் என்றும், அதனால் அந்த இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவந்துள்ளார். அதற்கு தாய் மற்றும் உறவினர்கள் வைரமுத்துவுக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வீட்டுமனை பகுதிக்கு பெட்ரோல் கேனுடன் வைரமுத்து சென்றார். அங்கு பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே வைரமுத்து பரிதாபமாக பலியானார். அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் அவர் தீக்குளித்ததை உடனடியாக யாரும் பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

    அந்த வழியாக சென்ற வர்கள் வைரமுத்து இறந்து கிடப்பதைப் பார்த்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வைரமுத்துவின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வறுமை மற்றும் குடும்பப்பிரச்சினையால் வைரமுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
    • 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராகுப்பத்தைச் சேர்ந்த ராஜி மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 21-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.

    இதனால் பாலகுரு வரதட்சணையாக 20 பவுன் நகை 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சரண்யா பி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×