search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "insect attack"

    • வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.
    • மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், பாண்ட மங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், ப.வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம், கொத்தமங்கலம், சிறு நல்லி கோவில், அய்யம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளனர்.

    வாழை

    பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டு, தற்போது வாழைத்தார்களை வெட்டி வருகின்றனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரி களுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்கப்படு கிறது.

    இங்கு ஏலம் எடுக்கப்ப டும் வாழைத்தார்கள், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கள்ளிப்பூச்சி

    இந்த நிலையில் தற்போது வாழைத்தார்களை கள்ளிபூச்சி தாக்குதலால் வாழைத்தார் காம்பு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தில் படர்திருக்கிறது.

    மேலும் அதைத் தொட்டால் பிசு பிசுப்பாக இருப்பதால் அதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புவதில்லை. இதனால் வாழைத்தார்களை ஏலத்தில் எடுத்த வியா பாரிகள், வெளி ஊர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளிபூச்சி களை அகற்று கின்றனர்.

    இதற்கு கட்டணமாக ஒரு வாழைத்தாருக்கு 10 ரூபாய் செலவாகின்றது

    இது குறித்து வியாபாரி கள் கூறியதாவது:-

    வாழைத்தார்கள் முற்றி வெட்டும் நிலையில் உள்ள பருவ காலத்தில் வெள்ளை நிறத்தில் கள்ளிப்பூச்சி நோயால் வாழைத்தார்கள் பாதிக்கப்படுகிறது. வெளி யூர்களுக்கு அனுப்புவதற்கு முன்பாக சுத்தமாக கள்ளிப் பூச்சியை அகற்ற வாழைத் தார்களுக்கு பீய்ச்சியடித்து சுத்தம் செய்து அனுப்பு கிறோம்.

    இந்த நேரத்தில் கள்ளிப் பூச்சி அகற்ற மருந்து அடித்தால் வாழைத்தார் சாப்பிடு பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு வாழைத்தார்களுக்கு மருந்து அடிக்காமல், தண்ணீர் மூலம் சுத்தம் செய்து வெளியூர்க ளுக்கு அனுப்பி வைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கள் கூறினர்.

    • மழை மற்றும் பனி சீசனில் முருங்கையில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும்.
    • மரங்களை சுற்றி நிலத்தை உழுது கூட்டு புழுக்களை அழிக்கலாம்.

    தாராபுரம் :

    முருங்கை விவசாயத்தில் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறை குறித்து பொங்கலூர் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது: மழை மற்றும் பனி சீசனில் முருங்கையில் கம்பளி புழு, இலை புழு தாக்குதல் இருக்கும்.

    இளம் குருத்து மற்றும் இலைகளில் இவை குவியலாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த புழுக்களின் முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாய் பூச்சிகளை அழிக்க விளக்கு பொறிகளை எக்டருக்கு ஒன்று வீதம் வைத்து கட்டுப்படுத்தலாம்.

    மீன் எண்ணெய் ரோசின் கோப் லிட்டருக்கு 25 கிராம் வீதமும், கார்பரில் 50 டபிள்யூ பி மருந்தை லிட்டருக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    வரும் மாதங்களில் காய்களில் ஈ தாக்குதல் இருக்கும். காய்கள் பிளந்தும், காய்ந்தும் காணப்படும். காய்களில் தேன் போன்ற திரவம் வடியும்.

    தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும். மரங்களை சுற்றி நிலத்தை உழுது கூட்டு புழுக்களை அழிக்கலாம். நிம்பிடைன் மருந்தை 50 சதவீத காய் உருவான பின்பும் 35 நாட்கள் கழித்தும் லிட்டருக்கு மூன்று மி.லி., வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • பூச்சிகள் சாப்பிட்டு வருவதால் பெரும்பாலான மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன
    • முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    தாராபுரம் :

    மழைக்காலம் முடிந்து பனிக்காலம் துவங்கும் தை மாதத்தில் முருங்கை மரம் பூத்துக் குலுங்கும். மாசி, பங்குனி மாதங்களில் அறுவடைக்கு வரும். ஆனால் தற்போது முருங்கையில் பூச்சி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. அதன் இலை, தழை, பூ என அனைத்து பாகங்களையும் பூச்சிகள் சாப்பிட்டு வருவதால் பெரும்பாலான மரங்கள் மொட்டையாக காட்சியளிக்கின்றன.

    மருந்து தெளித்தாலும் அவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லை. பூச்சிகள் வீரியம் பெற்று மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சீசன் காலத்தில் முருங்கை அறுவடைக்கு வருவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

    காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதிகளில் பூச்சி தாக்குதலால் வெண்டக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். வெண்டைக்காய் நடவு செய்யப்பட்டு 45 நாட்களில் அறுவடை தரும். அறுவடை மூன்று மாதம் வரை மகசூல் தரும். 

    தற்போது பாலக்கோடு மாரண்டஅள்ளி, வெள்ளிச் சந்தை காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம் பட்டி,  அனுமந்தபுரம், பந்தாரஅள்ளி  உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட வெண்டை செடிகளில் வெள்ளை பூச்சி தாக்குதலும் மற்றும் பச்சை புழுக்கள் தாக்குதலும் அதிக அளவு இருப்பதால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பூச்சி தாக்குதல் காரணமாக வெண்டைக்காய் செடிகளிலேயே சுருங்கி காணப்படுகிறது. இதனால் மகசூல் கடுமையாக சரிந்துள்ளது. சென்ற மாதம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் தற்போது கிலோ 12 ரூபாய் ஆக சரிந்துள்ளது.

    வெண்டைக்காயில் பூச்சி தாக்குதல் குறித்து உரிய மருந்து வகைகளை விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் நேரடியாக சென்று பரிசோதித்து பரிந்துரை செய்ய வேண்டும் என்று காரிமங்கலம் - பாலக்கோடு பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

    வெண்டை மகசூல் குறைவு மற்றும் விலை குறைவு என்பதால் வெண்டை பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்து கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
    ×