என் மலர்
நீங்கள் தேடியது "Instagram"
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
- இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் என் நண்பரை 24 மணிநேரமும் பின்தொடர்கிறேன் என்று கூறினார்.
இந்திய ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த 2 டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயனை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஜடேஜாவால் பின்தொடரும் ஒரே ஒரு நபர் நாதன் லயன் மட்டுமே.
ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் "என் நண்பர் நாதன் லயனை 24 மணிநேரம் பின்தொடர்கிறேன்" என்று கூறினார்.
- குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் சிறுமியிடம் சென்ற பேச்சு கொடுத்தார்.
- சேலம் சென்ற மாணவி அங்கு தனது காதலனை சந்தித்து பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 8-ந்தேதி பள்ளிக்கு சென்றார். அன்று மதியம் உடல்நிலை சரியில்லை வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு மாணவி பள்ளியை விட்டு வெளியேறினார். மாலையில் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடினார்கள். ஆனால் மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து செம்பியம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாயமான சிறுமி பள்ளி சீருடையுடன் சேலம் பஸ் நிலைய பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் சிறுமியிடம் சென்ற பேச்சு கொடுத்தார். அப்போது சிறுமி கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இன்ஸ்டாகிராமில் வாலிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை பார்ப்பதற்காகவே சேலத்துக்கு வந்தேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து இதுபற்றி சேலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியை மீட்டு செம்பியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பெற்றோருடன் சேலத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை சென்னைக்கு அழைத்து வந்தனர். அறியா பருவத்தில் ஏற்பட்ட காதலால் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி முன்பின் அறிமுகம் இல்லாத வாலிபரை பார்க்க மாணவி சேலம் சென்ற சம்பவம், பெரம்பூரில் அவர் படித்த பள்ளியில் பரபரப்பாக பேசப்பட்டது.
சேலம் சென்ற மாணவி அங்கு தனது காதலனை சந்தித்து பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மாணவிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டது.
- மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது.
பிப்ரவரி மாத வாக்கில் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் தனது கட்டண சந்தா முறையை அறிவித்தது. வெரிஃபைடு கட்டண சந்தா முறையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் பணம் கொடுத்து வெரிஃபிகேஷன் பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக எலான் மஸ்க்-இன் டுவிட்டர் தளத்தில் இதே போன்ற கட்டண முறையிலான வெரிஃபிகேஷன் சேவை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அறிவிக்கப்பட்டு, அதன்பின் தற்போது அமெரிக்காவிலும் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டு வருகிறது. மெட்டா வெரிஃபைடு சேவைக்கான கட்டணம் 11.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவிலும் இந்த சேவைக்கான வெயிட்லிஸ்ட் ஒன்றை மெட்டா பிளாட்ஃபாரம் துவங்கி இருப்பதாகவும், விரைவில் சந்தா கட்டண விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், மெட்டா வெரிஃபைடு சந்தா முறைக்கான இந்திய கட்டணம் மொபைலில் மாதம் ரூ. 1,450 என்றும் வலைதளத்திற்கு மாதம் ரூ. 1,099 என்றும் தெரிவித்து இருக்கிறது.
மெட்டா வெர்ஃபைடு சேவை பயனர் அக்கவுண்ட்களில் புளூ டிக் வழங்குவதோடு, கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. வெரிஃபைடு சந்தா செலுத்துவோர் ஏதேனும் அரசு அடையாள அட்டையை கொடுத்து அக்கவுண்ட்-ஐ வெரிஃபை செய்து கொள்ளலாம். சந்தா செலுத்துவோருக்கு நேரடி வாடிக்கையாளர் சேவை, பதிவுகளை அதிக நபர்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பலன்களை வழங்குகிறது.
இந்தியாவில் இந்த சேவை தற்போதும் பீட்டா டெஸ்டிங்கிலேயே உள்ளது. மெட்டா வெரிஃபைடு சந்தாவில் இணைய பயனர்கள் வெயிட்லிஸ்ட்-இல் இணைய வேண்டும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது. மெட்டா வலைதளத்தில் இருந்தபடி பயனர்கள் வெயிட்லிஸ்ட்-ஐ இயக்க முடியும்.
- பெண்ணிற்கு கடந்த ஒரு வருடமாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போன் அழைப்புகள் வந்துள்ளது.
- இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவது தெரியவந்தது.
தென்காசி:
தென்காசி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த ஒரு வருடமாக அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போன் அழைப்புகள் வந்துள்ளது.
இந்நிலையில் அதில் பேசுபவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். அவ்வாறு பேசிய ஒருவருடைய செல்போன் எண் மூலம் இன்ஸ்டாகிராமில் ஒரு போலியான கணக்கு தொடங்கப்பட்டு, அதன் மூலமாக தன்னை பற்றி அவதூறு செய்தி பலருக்கும் பகிரப்பட்டு உள்ளதை அறிந்த அந்த பெண் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அருள் செல்வி, சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) செண்பக பிரியா மற்றும்அதில் போலியான இன்ஸ்டாகிராம் ஐ.டி. உருவாக்கி அப்பெண்ணை பற்றி தவறாக பதிவு பரப்பியவர் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 23) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் செங்கல்பட்டுக்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
- இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றார்.
- அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அரிகிருஷ்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோணசீமா மாவட்டம் அமலாபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் அரிகிருஷ்ணாவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட நேரம் பேசி பழகி அரட்டை அடித்து வந்தனர். 2 பேரும் தங்களது செல்போன் எண் மற்றும் முகவரியை பகிர்ந்து கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு அரிகிருஷ்ணா இளம்பெண்ணை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தனக்கு திருமணமாகி கணவர் இருப்பதாகவும், நண்பர்களாக மட்டும் பழகலாம் என தெரிவித்தார். ஆனால் அரிகிருஷ்ணா உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என செல்போனில் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
இதனால் விரத்தி அடைந்த இளம்பெண் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி அரிகிருஷ்ணாவின் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு டெலிட் செய்துவிட்டார்.
இளம் பெண்ணுடன் பேச முடியாததால் ஆத்திரம் அடைந்த அரிகிருஷ்ணா நெல்லூரில் இருந்து அமலாபுரத்திற்கு வந்தார். பஸ் நிலையத்தில் இருந்த பாருக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததால் மாடிக்கு சென்றார். அங்கு வீட்டில் வேலை செய்யும் ஸ்ரீதேவி என்ற பெண் நின்று கொண்டு இருந்தார்.
தன்னுடைய காதலிதான் நிற்பதாக நினைத்த ஹரிகிருஷ்ணா தான் கொண்டு சென்ற கத்தியால் அந்த பெண்ணின் கழுத்து முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி கூச்சலிட்டபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதேவியின் அலறல் சத்தம் கேட்ட இளம் பெண்ணின் தாய் மாடிக்கு ஓடி வந்தார். அவரையும் அரிகிருஷ்ணா பயங்கரமாக வெட்டினார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அரிகிருஷ்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த இளம் பெண்ணின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதேவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரிகிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் கொலை நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அர்சுபாத்திமா என்ற பெண் வெளியிட்ட வீடியோவில் ஷகிராவின் குரலில் அவர் பேசியுள்ளார்.
- வீடியோவில் ஷகிரா மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் எப்படி இருக்கும் என்பது போன்று பேசி அசத்தி உள்ளார்.
பாப் உலகில் பிரபல பாடகியாக திகழும் ஷகிராவை போன்று மிமிக்ரி செய்து ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறது. அர்சுபாத்திமா என்ற பெண் வெளியிட்ட அந்த வீடியோவில் ஷகிராவின் குரலில் அவர் பேசியுள்ளார். அதில் ஷகிரா மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றால் எப்படி இருக்கும் என்பது போன்று பேசி அசத்தி உள்ளார்.
அவரது இந்த வீடியோ சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. சிலர் ஷகிராவின் ஹஸ்கி குரலை அர்சு மிக கச்சிதமாக மிமிக்ரி செய்துள்ளார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
- மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன.
திருமணத்தின் போது மணமகளுக்கு கைகளில் அழகு அழகாக மெஹந்தி வரைவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதில் வித்தியாசமாக காணப்படும் மெஹந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் திஷாதும்கர் என்ற மணமகளுக்கு வரையப்பட்ட மெஹந்தி தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. மெஹந்தி கலைஞரான அங்கிதா ஜாதவ் என்பவர் பகிர்ந்துள்ள அந்த மெஹந்தியில் மணமகள் மருதாணியுடன் உள்ளங்கையில் தனது உறவு கால வரிசையில் தேதிகள் வரையப்பட்டுள்ளன.
அதாவது மணமகள் இன்ஸ்டாகிராமில் மணமகனை சந்தித்த தேதியான 5.12.21, காதலை புரபோஸ் செய்த நாளான 19.1.22, முதலில் சந்தித்த 25.4.22, திருமணம் 31.1.23 என வரையப்பட்டிருந்தது. அந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
- பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார்.
- என்ஜினீயர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் யாரோ மர்மநபர் ஒருவர் பெண் என்ஜினீயரின் புகைப்படத்தை வைத்து போலியாக அவரது பெயரில் இன்ஸ்டாகிரம் பக்கத்தை தொடங்கினார். பின்னர் அந்த பக்கத்தின் மூலம் பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை பார்த்த இளம்பெண்ணின் நண்பர்கள் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் என்ஜினீயர் இது குறித்து உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர் பெயரில் அவரது புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி மெசேஜ் அனுப்பி வந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- மகன் தனது தந்தையை முதல் முறையாக விமானத்தில் அழைத்து செல்கிறார்.
- விமானத்தில் ஏறும் போது மகன் தந்தையுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சாமானிய மக்கள் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயிலையே பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு விமான பயணம் என்பது கனவாகவே இருக்கிறது.
இந்நிலையில் தன் தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் ஒரு மகன் அவரை முதல் முறையாக விமானத்தில் ஏற்றிச் சென்று அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், மகன் தனது தந்தையை முதல் முறையாக விமானத்தில் அழைத்து செல்கிறார். விமானத்தில் ஏறும் போது அவரது தந்தையுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வாலிபருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
- லேகா தனது பிறந்தநாளில் அவரது காதலனுடன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் முன்பு நிற்கிறார்.
- காதலர் ஆகாஷ் லேகாவை சதுக்கம் முன்புள்ள ஒரு பெரிய விளம்பர பலகையின் முன்பு அழைத்து செல்கிறார்.
காதலை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் வாலிபர்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிரப்படுவது உண்டு. ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் 'டேல்ஸ் பை லேகா' என்பவரது பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், லேகா தனது பிறந்தநாளில் அவரது காதலனுடன் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் முன்பு நிற்கிறார். அப்போது அவரது காதலர் ஆகாஷ் லேகாவை சதுக்கம் முன்புள்ள ஒரு பெரிய விளம்பர பலகையின் முன்பு அழைத்து செல்கிறார். அங்கு இருவரும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். அப்போது அவர்களின் பின்புறம் உள்ள பெரிய விளம்பர பலகையில் லேகாவின் புகைப்படங்கள் காட்டப்படுகிறது. இதைப்பார்த்து வியப்பில் ஆழ்ந்த லேகா மிகவும் சந்தோசப்படும் காட்சிகள் பார்ப்பவர்களை ரசிக்க செய்கிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை.
- எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள கோம்பை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 33 ), மினி பஸ் டிரைவர். இவருக்கும் நர்சிங் படித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த நித்யா (23) என்ற மாணவிக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நித்யா அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டது. 24 மணி நேரமும் செல்போனும் கையுமாக மூழ்கி இருந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் மனைவி மீது அவருக்கு சந்தேகம் வரவில்லை. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் என்பவர் நித்யாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் கணவருக்கு தெரியாமல் நீண்ட நேரம் அவருடன் அரட்டை அடித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியை ஒருவரை பார்க்கச் செல்வதாக கூறிச்சென்ற நித்யா அதன் பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து புஷ்பராஜ் காதல் மனைவியை அவர் வேலை பார்க்கும் பள்ளி, தோழிகள், உறவினர்கள் வீடு உன தேடி வந்தார். ஆனால் நித்யா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மனைவியின் செல்போனிலிருந்து புஷ்பராஜூக்கு நள்ளிரவில் அழைப்பு வந்தது. உடனே புஷ்பராஜ் செல்போனை எடுத்துப் பேசினார். எதிர் முனையில் பேசிய நித்யா, புது வாழ்க்கை ஒன்றை அமைத்துவிட்டேன். ஆகவே என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு அதிரடியாக இணைப்பை துண்டித்தார். இதைக் கேட்டு புஷ்பராஜ் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
பின்னர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில்,
மாயமான நித்யா கணவரை தவிக்க விட்டு இன்ஸ்டாகிராம் நண்பருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அந்த இன்ஸ்டாகிராம் நண்பர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உறுதியாக தெரியவில்லை. மதுரையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
- சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது.
- இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் பதில்.
உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இதுகுறித்து செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம்," இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.