search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Intensive surveillance in"

    • போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.
    • வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள்

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் ஈடுபட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    இதனால் சுற்று வட்டார கிராம பகுதகளில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்த அச்சத்தை போக்கும் வகையில் சென்னிமலை அருகே கே.ஜி. வலசு, ஈங்கூர், சிறு க்களஞ்சி உள்பட பல்வேறு இடங்களில் இரவு முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட போலீசார் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ரோந்து செல்கின்றனர்.

    தொடர்நது கிராமப்பு ற ங்களில் தனி யாக உள்ள வீடுகள், வய தான தம்பதி கள் வசிக்கும் வீடுகள் மற்று ம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள வீடுகள் உள்ள பகுதிகளிலும் இரவு நேரங்களில் போலீசார் சென்று பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    இதற்காக ''ஸ்மார்ட் காவலர்'' என்ற செல்போன் செயலி போலீசாரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்தந்த பகுதியில் இருந்து போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்ற வேண்டும்.

    இதன் மூலம் எந்த போலீசார் எந்த இடத்தில் இருந்து எத்தனை மணிக்கு ரோந்து பணியின் போது போட்டோ எடுத்து உள்ளார் என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.

    வயதான தம்பதிகளை போலீசார் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை அறிய நள்ளிரவு நேரத்திலும் அவர்களை எழுப்பி புகைப்படம் எடுத்து செயலி மூலம் பதிவேற்றி வருகின்றனர்.

    கிராமப்புறங்க ளில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×