என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "International Investment Bank"
- கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.
- ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.
மும்பை:
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திகழ்கிறது. 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. விளம்பரங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றால் வருவாய் குவிகிறது.
16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த நிலையில் ஐ.பி.எல்.லின் வணிக நிறுவன மதிப்பு தற்போது ரூ.1.3 லட்சம் கோடியாகும். இதனை உலகம் முழுவதும் உள்ள பல விளையாட்டு உரிமைகளை மதிப்பிடும் உலகளாவிய முதலீடு வங்கியான ஹெளலி ஹான் லோகி தெரிவித்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியை விட வணிக மதிப்பு 80 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.
ஐ.பி.எல். போட்டியின் பிராண்ட் மதிப்பு ரூ.26,600 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்சின் பிராண்ட் மதிப்பு தான் அதிகமாக இருக்கிறது. அந்த அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.1760 கோடியாக உள்ளது. அதற்கு அடுத்தப் படியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ.1605 கோடியாகவும், மும்பை இந்தியன்சுக்கு ரூ.1504 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ரூ.1490 கோடியாகவும் பிராண்ட் மதிப்பு இருக்கிறது.
ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. என்.பி.ஏ., இங்கிலாந்து பிரீமியர் லீக், ஜெர்மனி கால்பந்து லீக் போன்றவற்றை விட ஐ.பி.எல். ஒளிபரப்பு கட்டணம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2027 வரை ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வணிக மதிப்பு அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட இது 3 மடங்கு விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்