search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel and Iran war"

    • இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா அந்நாட்டுக்கு உதவிகளை செய்து வருகிறது.
    • மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவ உபகரணங்களை நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் ஆகியவற்றுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இரு நாடுகளும் வான் வழித் தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா அந்நாட்டுக்கு உதவிகளை செய்து வருகிறது. மேலும் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது படைகளை நிலைநிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை தாக்கி அழிக்கிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய கிழக்கு பகுதியில் பாதுப்பை மேலும் பலப்படுத்த கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. மத்திய கிழக்கில் கூடுதல் ராணுவ உபகரணங்களை நிலைநிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது.

    அதன்படி பாலிஸ்டிக் ஏவுகணைத் தற்காப்பு அழிப்பான்கள் மற்றும் நீண்ட தூர பி-52 குண்டு வீச்சு விமானங்கள், போர் படைப்பிரிவுகள், டேங்கர் விமானங்கள் ஆகியவை போர் கப்பலில் அனுப்பப்படுகிறது.

    இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை கூறும் போது, மத்திய கிழக்கில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் படைகளின் பாதுகாப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பில் எங்கள் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், பாதுகாப்பு மந்திரி உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தது.

    • வன்முறையில் இருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுக்கிறோம்.
    • பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவது இன்றியமையாதது.

    ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை கூறும்போது, அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம். உடனடியாக தீவிரத்தை குறைக்கவும், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், வன்முறையில் இருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுக்கிறோம்.

    பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை பேணப்படுவது இன்றியமையாதது. அங்கு நடந்து வரும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

    ×