search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israeli Prime Minister"

    • மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாக கூறி உள்ளார்.
    • நோயாளியின் இதயம் மிக மெதுவாகத் துடிக்கும்போது, இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் ரமத் கானில் உள்ள ஷேபா மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருந்ததால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆபரேசன் செய்து பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிரதமர் நேதன்யாகு கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்த திட்டங்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த சீர்திருத்தம் ஜனநாயகத்தை சிதைக்கும் என அரசின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். பிரதமருக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.

    முன்னதாக நேதன்யாகு வெளியிட்ட வீடியோவில் எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வந்ததும் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறி உள்ளார். துணை பிரதமர் லெவின்தான் இந்த நீதித்துறை மாற்றத்தின் மூளையாக இருக்கிறார்.

    கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதித்துறை சீர்திருத்த திட்டம் தொடர்பான தீர்மானம் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதனால் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று இரவு இஸ்ரேல் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தி ஈடுபட்டனர். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ஜெருசலேமுக்குள் அணிவகுத்து சென்று பாராளுமன்றத்திற்கு அருகில் முகாமிட்டனர்.

    பாராளுமன்றம் சென்று தீர்மானம் மீது வாக்களிக்க ஏதுவாக சரியான நேரத்தில் பிரதமர் நேதன்யாகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் அமைச்சரவையின் வாராந்திர கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    நோயாளியின் இதயம் பலவீனமாகி மிக மெதுவாகத் துடிக்கும்போது மயக்கம் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் இதயத்தை சீராக துடிக்கச் செய்வதற்காக பேஸ்மேக்கர் பொருத்தப்படுகிறது. இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தலாம். இதயத்திற்கு மின் துடிப்புகளை அனுப்புவதன் மூலம், இந்த சாதனம் ஒரு நபரின் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்கும். பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்ட நோயாளிகள், சில நாட்களுக்குள் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறைக்காக மருத்துவமனையில் குறைந்தது ஒருநாள் தங்கியிருக்க வேண்டும். பேஸ்மேக்கரின் செயல்பாடுகளை மருத்துவர்கள் கண்காணித்து உறுதி செய்தபின் வீடு திரும்பலாம்.

    • நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    • சுட்டெரிக்கும் வெயிலில் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக இருந்த நிலையில், அங்கு சென்ற நேதன்யாகுவின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    நேற்று அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டதையடுத்து அவரை டெல் அவிவ் அருகே உள்ள ஷேபா மருத்துவ மையத்திற்கு சென்று பரிசோதனை செய்யும்படி அவரது மருத்துவர் அறிவுறுத்தியிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் நேதன்யாகு அலவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. நீர்ச்சத்து குறைந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே, ஒரு வீடியோ பதிவில், சுட்டெரிக்கும் வெயிலில் நெதன்யாகு தனது மனைவியுடன் தொப்பிகூட அணியாமல், தண்ணீர் குடிக்காமல் ஏரியில் நேரத்தை செலவிட்டதாக கூறினார். எனினும் இது நல்லது அல்ல என்று கூறிய அவர், அனைவரும் வெயிலில் நிற்பதை குறைக்க வேண்டும் என்றும், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    பிரதமருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாராந்திர இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டணி அரசில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நேட்டன்யாஹூ தெரிவித்தார். #IsraeliPrimeMinister #BenjaminNetanyahu
    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பிராந்தியமான காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்டகாலமாக போர் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் எகிப்து மத்தியஸ்தம் செய்ததன் விளைவாக ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முன்வந்தது. 2 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாஹூ தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

    இந்த போர் நிறுத்த முடிவு இஸ்ரேலின் வலதுசாரி கூட்டணி அரசில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராணுவ மந்திரி அவிக்டோர் லீபர்மென் தனது பதவியை ராஜினாமா செய்தார். மந்திரி சபையின் இந்த நடவடிக்கை ‘பயங்கரவாதத்திடம் சரணடைவது’ என்று அவர் சாடினார். ராணுவ மந்திரியின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு அரசியல் குழப்பம் தீவிரமடைந்ததையடுத்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என மந்திரிகள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இது பிரதமர் நேட்டன்யாஹூவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நேட்டன்யாஹூ தொலைக்காட்சி நேரலையில் தோன்றி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூட்டணி அரசு பிளவுபடுவதை தவிர்க்கும் விதமாக ராணுவ மந்திரி பொறுப்பை தான் ஏற்பதாக அறிவித்தார். அவர் ஏற்கனவே வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பையும் கூடுதலாக வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்கூட்டியே தேர்தல் நடத்துவது பற்றி பேசிய அவர், “இப்போது நிலவும் பாதுகாப்பற்ற மற்றும் இக்கட்டான சூழலில் ஆட்சியை கவிழ்ப்பது சிக்கலாகும். எனவே தேர்தல் முன்கூட்டியே நடக்காது. அப்படி செய்தால் அது பொறுப்பற்ற செயல் ஆகும்” என கூறினார்.

    மேலும், கூட்டணி அரசில் நிலவி வரும் அசாதாரணமான சூழலை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக நேட்டன்யாஹூ தெரிவித்தார்.
    ×