என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "isro employee"
தக்கலை:
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் (வயது 46).
இவர் காவல்கிணறில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. நிறுவனத்தில் டெக்னீசினியாக பணியாற்றி வந்தார். மைக்கேல்ராஜ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரை நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந் தேதி மைக்கேல்ராஜ் இறந்தார்.
அவரது உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்வதற்காக மாங்கோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர். மைக்கேல்ராஜ் உடலை பார்த்து அவரது தாயார் மரியரோசிலி (70) கதறி அழுதார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மரியரோசிலியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே மைக்கேல்ராஜ் மரணம் அடைந்ததால் சோகத்தில் இருந்த உறவினர்கள், அவரது தாயாரும் இறந்து விட்ட தகவல் அறிந்து மேலும் சோகத்தில் மூழ்கினர்.
மைக்கேல்ராஜின் உடல் கடந்த 29-ந் தேதி உடனடியாக அடக்கம் செய்யப்பட்டது. மரியரோசிலியின் உடலை உறவினர்கள் ஆஸ்பத்திரியிலேயே வைத்திருந்தனர். பின்னர் இன்று காலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர். மரியரோசிலியின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இறந்த மைக்கேல் ராஜூவுக்கு செல்லா பங்கஜம் என்ற மனைவியும், ஜெனிலா, ரீபன் என்ற 2 குழந்தைகளும் உள்ள னர்.