என் மலர்
நீங்கள் தேடியது "jail"
- அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
- பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
திபிலிசி:
ஜார்ஜியா முன்னாள் அதிபர் மிகைல் சாகாஷ்விலி (வயது 57). இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
இதுதொடர்பான ஒரு வழக்கில் 2018-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன்பேரில் மிகைல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதற்கிடையே அவர் சட்ட விரோதமாக எல்லை தாண்டி உக்ரைன் சென்றிருந்தார். எனவே சட்ட விரோத பயணம் மேற்கொண்டதற்காக அவருக்கு தற்போது மேலும் 4½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அமன் சாவ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தொடர்ந்த வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி ஜார்கண்ட் போலீசார் ராய்ப்பூர் சென்று, அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
ராஞ்சியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பலாமு மாவட்டத்தின் செயின்பூர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அமன் சாவின் கூட்டாளிகள் அவரை தப்ப வைப்பதற்காக போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அமன் சாவின் கூட்டாளிகள் வீசிய குண்டு போலீஸ் வாகனத்தின் முன்பு விழுந்து வெடித்தது. இதனால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி அமன் சாவ், போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமன் சாவ் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தொடர்ந்து அமன் சாவின் கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி
பெரம்பலூர்
பெரம்பலூர் மதர்சா சாலையை சேர்ந்தவர் கமால்பாட்ஷா. இவர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சல்மான் (வயது30). பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் லைபரிக்கு வரும் போது சல்மானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் காதலித்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தை கூறிய சல்மான் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நான் கூப்பிடும் போதெல்லாமல் வர வேண்டும். இல்லை யென்றால் வீடியோவை சமூக வளைதளத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டி அந்த இள ம்பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக சல்மான் இருந்துள்ளார்.
இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம டைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சல்மான் உன்னை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தமுடியாது என கூறிவிட்டார்.
இந்நிலையில் 2014-ம் ஆண்டு அந்த இளம்பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளம்பெண்ணை திருமணம் செய்வதாய் கூறி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சல்மான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல் இளம்பெண்ணிடம் திரு மணம் செய்துகொள்வதாய் ஆசை வார்த்தைக் கூறி பழகி, கற்பழித்து ஏமாற்றிய சல்மானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
அபராத தொகையில் ரூ.1.75 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து சல்மான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
- பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்
நீலகிரி,
மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் கடந்த 2008ல் புதிதாக வாங்கிய தொழிலாளா் இல்லத்துக்கு பெயா் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, பெயா் மாற்று சான்று பெற கீழ்குந்தா நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றிய ஜெயலட்சுமி என்பவரை அனுகியுள்ளாா்.
பெயா் மாற்று சான்று வழங்க ஜெயலட்சுமி ரூ.1, 800 லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது குறித்து நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிவகுமாா் புகாா் அளித்தாா். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயலட்சுமியிடம், சிவகுமாா் வழங்கினாா்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா், லஞ்சம் பெற்ற ஜெயலட்சுமியை பிடித்தனா். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணை முடிவில் ஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
- சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்ற லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சாலையில் கற்களை போட்டு பிடித்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்துள்ள ரெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மு.புத்தூர் கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் உள்ளது.
இந்த சுரங்கத்திலிருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள், சுண்ணாம்புக்கற்களை ஏற்றி அங்குள்ள கோவில் நிலத்தின் வழியே சென்று வருகிறது. இதனால், அக்கிராம மக்கள் கோவிலை புதிதாக கட்டித்தர வேண்டும் என சிமெண்டு ஆலை நிர்வாகத்திடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், இதுவரை கோவில் கட்டித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று சாலையில் கற்களை போட்டு அவ்வழியே சென்ற சுண்ணாம்புக்கற்கள் ஏற்றி சென்ற லாரிகளை சிறை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிமெண்டு ஆலை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், கோவில் கட்டுவதற்கான அனுமதி, செலவு அறிக்கை பெற்றுத்தந்தால் கோவிலை விரைவில் கட்டித்தருவதாக கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரிகளை கிராம மக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது."
- போக்சோவில் எலக்ட்ரீசியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன
- பாலியல் வழக்கில் கைதானவர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கீழத் தெருவை சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது42). தனியார் சிமெண்ட் ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பிளஸ் 2 மாணவி ஒருவருக்கு அருண்ராஜ் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருமானூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அருண்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட அருண்ராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
- கறிக்கடைக்காரருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
- விவசாயி கொலை வழக்கில்
கரூர்:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). விவசாயியான இவர், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். பங்களாபுதூரை சேர்ந்தவர் மாரியப்பன் (59). கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஆடு விற்பனை செய்வதாகக் கூறி சரவணன் மாரியப்பனிடம் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சரவணனிடம் சென்று மாரியப்பன் ஆடுகளை கேட்டுள்ளார். அதற்கு பணமாக கொடுத்து விடுவதாக சரவணன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், இதில் சரவணணை ஆடு வெட்டும் கத்தியால் மாரியப்பன் குத்தியதில் அவர் காயமடைந்தார். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரவணன் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாரியப்பனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை ெசலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மாரியப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- விருகம்பாக்கம் போலீசார் பெண் போலீசிடம் அத்துமீறிய தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் வீடுபுகுந்து அதிரடியாக கைது செய்தனர்.
- இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை:
சென்னை சாலிகிராமம் தசரதபுரம் பஸ்நிலையம் அருகே கடந்த 31-ந்தேதி இரவு மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர ராஜா உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. பெண் தலைவர்கள் இருவர் கலந்து கொண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விருகம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இளம்பெண் போலீஸ் ஒருவரும் சக காவலர்களோடு சீருடையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கூட்டம் முடிந்து கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் புறப்பட்ட நேரத்தில் லேசான நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. இளைஞர் அணி பிரமுகர்களான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் பெண் போலீசின் இடுப்பை பிடித்து கிள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக மற்ற காவலர்களிடம் கூறினார். உடனே கேசவன் என்ற காவலர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது தி.மு.க. பிரமுகர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைபார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் என்ன நடந்தது? என்று கேட்டு விசாரித்து கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில் போலீஸ் பிடியில் இருந்து பிரவீன் தப்பி ஓடினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியரும் மற்ற காவலர்களும் விரட்டி சென்று பிரவீனை மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்றிருந்த தி.மு.க. நிர்வாகிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
போலீஸ் பிடியில் சிக்கிய இருவரையும் மீட்க தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து இச்சம்பவத்துக்கு அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
தி.மு.க. நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயம்பேடு துணை கமிஷனர் குமார் முன்பு தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டுவிட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் இதற்காக பெண் போலீசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் கடிதம் எழுதி கொடுத்தனர்.
பெண் போலீசும் தனது புகார் மீது மேல்நடவடிக்கை தேவை இல்லை என்று எழுதி கொடுத்ததாகவும், இதனால் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுவிட்டனர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் இத்தோடு முடிந்துவிட்டது என்றே கருதப்பட்டது.
இந்த நிலையில் விருகம்பாக்கம் போலீசார் பெண் போலீசிடம் அத்துமீறிய தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகிய இருவரையும் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் இரவோடு இரவாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு வீட்டில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் நள்ளிரவிலேயே சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 353 (அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல்) 354 ஐ.பி.சி. (பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி செயல்படுதல்) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமாதானமாக பேசி பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் சத்தமில்லாமல், அதிரடியாக செயல்பட்டு 2 பேரையும் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரவீன், ஏகாம்பரம் இருவரும் 129-வது வார்டு இளைஞர் அணி உறுப்பினர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்தான் அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிக்கி உள்ளனர்.
- 6 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- விசாரணை மற்றும் தண்டனை காலதத்துக்குப் பின்னர் அவரவர் தாயகம் அனுப்பி வைப்பது வழக்கம்.
திருச்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், இலங்கை, மியான்மர், பல்கேரியா, உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், பயண ஆவணங்கள் தொடர்புடைய பல்வேறு வழக்குகள் தொடர்பாக, விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை மற்றும் தண்டனை காலதத்துக்குப் பின்னர் அவரவர் தாயகம் அனுப்பி வைப்பது வழக்கம்.
அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த வர்ஷானன், பாய்வா ரீகன், ராஜெம்ட்ராம், உதயகுமார், அருள் வசந்தன், அருண் குரூஸ் உள்ளிட்ட 7 பேரை தாயகம் அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் தற்போது தாயகம் செல்ல விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து மற்ற 6 பேரும் இலங்கை செல்லும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர்
- மதுரை சிறையில் கைதி பரிதாபமாக இறந்தார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த முனியன் மகன் முருகன் (44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர்.
- வயிற்று பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பாபநாசம் தாலுகா கீழ கோவில் பத்து உடையார் கோயிலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த யுவராஜ், ராமு, சிகாமணி, மணிமாறன் ஆகிய 4 பேர் தோட்ட வேலைக்காக மலேசியா நாட்டிற்கு செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர். அங்கிருந்து மலேசியா செல்ல இருப்பதாக அவர்களின் குடும்பத்தினரிடம் கூறினர்.
ஆனால் அதன் பிறகு ஒரு எண்ணில் இருந்து எங்களுக்கு ஒரு குரல் செய்தி வந்தது.
அதில் இது போலீஸ்காரர் தொலைபேசி என்றும், எங்களை போலீசார் பிடித்து வைத்து ஜெயிலில் அடைத்து வைத்துள்ளனர் எனவும் கூறி துண்டிக்கப்பட்டது.
அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லை.
இதனால் மன வேதனை அடைந்த அந்த நான்கு பேரின் குடும்பத்தினரும் திரும்பவும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றவர்கள் தற்போது உயிருடன் உள்ளார்களா ? இல்லையா ? என்ற எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை.
எனவே மலேசியா நாட்டிற்கு வேலைக்கு சென்ற 4 பேரையும் பத்திரமாக மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது
- பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் வினோத்குமார்(வயது29). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்தனர்.
இந்்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தாரர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ராஜா ஆஜரானார்.