search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalitha plans"

    ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளார் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி நடத்தி வருகிறது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தற்போது முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். சுமார் 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது.

    இந்த பேரணி வரும் வழியில் அரசின் சார்பில் மரகன்றுகள் நடும் விழா, புத்தகம் வழங்கும் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    ஒவ்வொரு தொகுதியில் ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்து உள்ளது பாராட்டுக்கு உரியது. திருவண்ணாமலையில் அரசின் சார்பில் கிரிவலப் பாதை மேம்பாட்டு பணி, யாத்ரி நிவாஸ் போன்றவை நடைபெற்று வருகிறது. ரூ.30 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு, அவர் அறிவித்த திட்டங்கள் இவர்கள் செயல்படுத்துவார்களா, இல்லையா என்று கேள்வி எழுப்பினர். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வருவாய்த்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத் துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை சார்பில் 410 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் மனோகரன், அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுனில்குமார், மாவட்ட பேரவை இணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி வெங்கடேசன், நகர செயலாளர் செல்வம், நகர துணை செயலாளர் அரசப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வி.பன்னீர்செல்வம், தூசி மோகன் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளார் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னால் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் எம்.எஸ்.ை நனாக்கன்னு, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஆர்.டி.ஓ தங்கவேல்,சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரேனுகா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து 582 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள், உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன் வழங்கினர். இதை நிகழ்ச்சியின் முடிவில் தாசில்தார் ரேணுகா நன்றி கூறினார். முன்னதாக கலசப்பாக்கத்திலிருந்து செங்கம் வரை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

    ×