என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jayasudha"
- கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.
திருப்பதி:
தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'நான் அவனில்லை', 'அபூர்வ ராகங்கள்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் அவருக்கு தாயாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜெயசுதா பாஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் தெலுங்கானா தலைவர் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். இனிவரும் காலங்களில் சினிமாவை விட அரசியலுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன் என்றார்.
இவரின் சொத்துக்களை குடும்பத்தினரும் உறவினர்களும் அனுபவித்ததாகவும், அதனால் அவர் வருத்தப்பட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ஒரு தனியார் இணையதளத்துக்கு ஜெயசுதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு 2 அண்ணன்கள், ஒரு தங்கை. நான் நடிக்க தொடங்கிய பிறகு என் குடும்பத்தினரின் தேவைகளை நான் பார்த்துக்கொண்டேன். பிறகு கல்யாணமாகி, எல்லோருக்கும் தனித்தனி குடும்பங்கள் உண்டானது. 1980, 1990களில் தெலுங்கில் முன்னணி நடிகையாக நிறைய சம்பாதித்தேன். அப்போது எனக்கு எதிர்காலத்தை பற்றிய சிந்தனை எல்லாம் அதிகமாக இல்லை.
எனக்கும், என் கணவருக்கும் சினிமா தொழில்தான் தெரியும். அதனால், கணவர் சினிமா தயாரிப்பாளர் ஆனார். என் கணவர் மூன்று தெலுங்கு படங்கள் எடுத்தார். அவை ஹிட்டாகி, எங்களுக்கு லாபமும் கிடைத்தது. அடுத்து இந்தியில் ஒரு படம் எடுத்து, அது சுமாராக தான் ஓடியது. அந்த படத்தால் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது.
பிறகு கடன் வாங்கி, மீண்டும் தெலுங்குப் படங்களைத் தயாரித்தார். அடுத்து எடுத்த 3 தெலுங்கு படங்களும் பெரிய தோல்விகளைத் தழுவின. இதனால் எங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் உண்டானது. கடன், வட்டிச்சுமை, மன உளைச்சல் என்று எங்கள் இருவருக்கும் தினந்தோறும் மனக்கஷ்டங்கள்தான்.
அதன் பிறகு பயத்தில் என் கணவர் மீண்டும் படம் எடுக்க தயங்கினார். அதையே நினைத்துக்கொண்டே இருந்ததால்தான் என் கணவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. கடன் கேட்டு கொடுத்தவர்கள் அடிக்கடி போன் பண்ணுவது, வீட்டு வாசலில் நிற்பது, நாலு பேர் நாலு விதமா பேசுவது எல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமா பிடிக்காது. அதனால் கடன் சுமை தீர்ந்தா போதும் என்று முடிவு எடுத்து, எங்கள் சொத்துகளை விற்றோம்.
அப்போது பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவும் அளவுக்கு என் குடும்பத்தார் யாரும் வசதியாக இல்லை. அதனால் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். நடிப்புக்கும், என் வயதுக்கும் ஏற்ற பொறுப்பு உள்ள கதாபாத்திரங்களில் இப்போது வரை நடிக்கிறேன். நடித்து சம்பாதித்த பணத்தில், கடன் சுமைகளை எல்லாம் முழுமையாக சரிப்படுத்தினேன்.
பசங்களை படிக்க வைத்து வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துகிட்டேன். இப்போது சில சொத்துகள் மட்டும் இருக்கு. ஆனால் எந்தக் கடன் சுமையும் இல்லை என்கிற நிறைவும், சந்தோஷமும் அதிகமாகவே இருக்கு.
எங்களுக்கு கஷ்டமான நிலை ஏற்பட்ட போதும், இப்போதும் என் உடன்பிறந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாகத்தான் இருக்காங்க. சொத்துகளை இழந்ததெல்லாம், சினிமா தயாரிப்பு பணிகளால்தான்.
இந்நிலையில் என் கணவர் இறந்துட்டார். பின்னர் என் பசங்களுக்கு அடுத்து, என் குடும்பத்தினர்தான் எனக்குப் பக்கபலமா இருக்காங்க. அவங்க யாரும் என் சொத்துக்களை அபகரிக்கவில்லை. உண்மைநிலை இதுதான். யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்’.
இவ்வாறு ஜெயசுதா கூறினார். #Jayasudha
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்