என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "jersey number"
- ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 18 குறித்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது.
- ஏழு வருடங்களுக்கு முன் 2016, மே 18-ல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கோலி சதமடித்திருந்தார்.
ஐதராபாத்:
பொதுவாக ஒவ்வொரு நம்பருக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும். கோலியின் கதை சற்று வித்தியாசமானது. சச்சினும் டோனியும் ஜெர்சி நம்பரை அவர்களே தேடிக் கொண்டார்கள். ஆனால் நம்பர் 18 விராட்டை தேடி வந்தது. அவர் கேட்காமலே நம்பர் 18 ஜெர்சி வழங்கப்பட்டது. பின்னாளில் அந்த நம்பரே அவர் வாழ்வில் முக்கிய நாட்களாகவும் மாறிப் போனதாக கோலியே கூறியிருக்கிறார். ஆம், கோலி இந்திய அணிக்காக முதன்முதலில் ஆடிய நாள் ஆகஸ்ட் 18, 2008. கோலியின் உயிருக்கு உயிரான தந்தை காலமானது டிசம்பர் 18, 2006.
இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 18 குறித்த சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளது. நேற்றைய தேதி மே 18. ஐதராபாத்துடன் ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டி. 187 என்ற சற்று கடினமான இலக்கு. ஆர்சிபி பிளேஆப் செல்ல கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி வேறு. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 18 ஓவரில் சதம் அடித்து அந்த ஓவரிலேயே அவுட்டும் ஆனார். 18-ம் தேதியில் 18-வது ஓவரில் 18-ம் நம்பரின் சதம் என பதிவிட்டு ரசிகர்கள் கோலியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, சரியாக ஏழு வருடங்களுக்கு முன் 2016, மே 18-ல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கோலி சதமடித்திருந்தார். அன்று நடந்த அதே மேஜிக் நேற்றும் நடந்திருப்பதாகவும் கூறி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.