search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel theft"

    • சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
    • ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    பாளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மாதாய் என்ற ஜான்சி (வயது 38). இவரது கணவர் சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சி தனது 17 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மொபட்டில் ஜான்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டதாக ஐகிரவுண்டு போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் தாய்-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் ஜான்சியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மகனை சிக்க வைக்க போலீசில் பொய் புகார் அளித்ததாகவும் ஜான்சி போலீசில் தெரிவித்தார்.இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீ சார் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.

    • பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார்.
    • அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.

    சேலம்:

    சேலம் ஒமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். அப்போது கருப்பூர் அருகே சென்றபோது அவரது கழுத்தில் இருந்த 2½ பவுன் செயின் மாயமானது. இதனால் பதறிபோன பார்வதி கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்வதி அருகில் இருந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்களிவ் வந்த இருவர் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (75) .

    இவர் மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அங்கு நேற்று மதியம் பள்ளிக்கு சென்று இருந்த பேரக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்களிவ் வந்த இருவர், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் காந்திமதியிடம் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வயதானவர்கள் கழுத்தில் நகை அணிந்து தனியாக செல்லக்கூடாது வழிப்பறி நடக்கிறது.

    எனவே கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழட்டித் தாருங்கள்" எனக் கூறி அவரது மணிபர்ஸில் வைப்பது போல, ஏமாற்றி செயினை திருடி சென்றுள்ளனர்.

    வீட்டில் வந்து மூதாட்டி காந்திமதி பார்த்தபோது செயின் இல்லை.

    இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் எனக் கூறி மூதாட்டி காந்திமதி இடம் தங்க சங்கிலியை நூதனமாக திருடிய இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசி டிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மன்னார்குடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராவில் சிக்கினர்
    • 10½ பவுன் நகை, பைக் பறிமுதல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருணாசலநகர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டுக்குச் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அனிதா என்பவரின் கழுத்தில் இருந்த 2 ½ பவுன் தங்கச் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், ஆனந்தன், ஏட்டு சந்திரபாபு, காவலர் ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணித்து அதனை பின்தொடர்ந்தனர்.

    பள்ளிகொண்டா அருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளில் கொள்ளையர்களின் பதிவு மிக தெளிவாக பதிவு ஆகியிருந்தது.

    அவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பள்ளிகொண்டா அடுத்த கீழ்வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் நிரஞ்சன் (வயது 25) பொய்கை பகுதியில் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவரது தம்பி நிதீஷ்குமார் (21) என தெரியவந்தது.

    விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கீதாஞ்சலி என்பவரிடம் 7 சவரன் செயின், அதே பகுதியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே அரசு மருத்துவமனை நர்சு சுதா என்பவரின் கழுத்தில் இருந்த 6½ பவுன் நகையையும், பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் பகுதியில் சாவித்திரி என்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்ததும் சில தினங்களுக்கு முன்பு அனிதாவிடம் 2½ பவுன் நகை பறித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 10½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார்.
    • பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் மேரி (வயது 57). இவர் சம்பவத்தன்று கள்ளக்குறிச்சியிலிருந்து பஸ்சில் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து இளையாங்கன்னி செல்ல வேறு ஒரு பஸ்சில் ஏறினார். அப்போது கையில் வைத்திருந்த பையை அவர் பார்த்த போது, அதில் இருந்த 13 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தென்காசி:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 36). இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். இவரது அக்காள் கணவர் தாழையூத்தை சேர்ந்த நாராயணகுமார். இவர் பாளை சமாதானபுரத்தில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் முருகசேன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த நிலையில், தனது அக்காள் கணவர் நாராயணகுமாரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக புறப்பட்டார். இதனை அறிந்த நாராயணகுமாரின் நண்பர்களான ஆட்டோ டிரைவர் தங்கதுரை, செல்வம் ஆகியோர் நாங்களும் குற்றாலம் வருகிறோம் என கூறியுள்ளனர்.

    இதையடுத்து 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் குற்றாலத்திற்கு சென்ற நிலையில் அங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். நேற்று மதியம் நாராயணகுமார், தங்கத்துரை ஆகியோர் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றனர். அறையில் முருகசேன் மற்றும் செல்வம் மட்டுமே இருந்துள்ளனர்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அறையில் முருகேசன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். செல்வத்தை காணவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணகுமார், குற்றாலம் போலீசில் புகார் அளித்தார்.

    தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், டி.எஸ்.பி. நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, பாலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கொலை நடப்பதற்கு சற்று முன் வரை செல்வம் மட்டுமே முருகேசனுடன் இருந்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவரை காணவில்லை. அதே நேரத்தில் முருகேசனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை காணவில்லை. அந்த நகை திருட்டு போயிருந்தது. ஏற்கனவே செல்வம் மீது திருட்டு, கஞ்சா உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருப்பதாலும், அவர் மாயமாகி விட்டதாலும் நகைக்கு ஆசைப்பட்டு முருகேசனை அவர் கொலை செய்துவிட்டு நகையுடன் தப்பிச்சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்த பின்னரே முழு விபரம் தெரியவரும் என்பதால் தனிப்படை அமைத்து செல்வத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை திருடிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி புதுத்தெரு நெடுங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முருகன் மனைவி மகாலட்சுமி (வயது26). மணிகண்டன் குடும்பத்து டன் வெளியூர் சென்றி ருந்தார். இதனால் தனது வீட்டின் கதவை பூட்டி மகாலட்சுமியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார். பின்னர் மணிகண்டன் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் வைத்தி ருந்த 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது.

    இதுகுறித்து கீரைத்துறை போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகாலட்சுமி வீட்டின் கதவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    உசிலம்பட்டி குருவக் குடியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் அஜய் என்ற ரோகித் (21). இவர் மதுரை ஆரப்பாளை யம் மெயின் ரோட்டில் கார்ப்பரேசன் காலனி தெரு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து கரிமேடு போலீசில் அஜய் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி செய்த வாலி பர்களை தேடி வருகின்றனர்.

    • திருச்சியில் பரபரப்பு கணவர் முன்பு இளம் பெண்ணை தாக்கி நகை பறிப்பு
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை வீச்சு

    திருச்சி,

    திருச்சி கே.சாத்தனூர் வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி நாகலட்சுமி (வயது 26) சம்பவத்தன்று இருவரும் நாகமங்கலம் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அப்பொழுது திருச்சி மதுரை சாலையில் தனியார் என்ஜினியர் கல்லூரி அருகில் வரும் பொழுது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து கோவிந்தராஜை வழிமறித்து அவரது மனைவி நாகலட்சுமி தாக்கி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் நகையை பறித்துக் கொண்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த நாகலட்சுமி திருச்சி அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நாகலட்சுமி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • ஓய்வூதியம் பெறும் ஆவணங்களை கேட்டு மூதாட்டியிடம் நகை திருடப்பட்டது.
    • நூதன திருட்டில் ஈடு பட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகர் அன்ன–காமு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி தேவகி (வயது 73). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள–னர். அவர்களுக்கு திருமண–மாகி வெளியூர்களில் குடும் பத்துடன் வசித்து வருகின் றனர்.

    கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக தேவகி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார்.

    அவர் தன்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்துகொண் டார். பின்னர் தேவகியிடம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியதோடு, பக்கத்து தெருவில் உள்ள அலுவலகத்திற்கு அதிகாரி வந்துள்ளார்.

    அவரை பார்க்க வருமாறும், வரும்போது கழுத்தில் நகை எதுவும் அணிந்து வரக்கூடாது, எனவே நகையை கழுற்றி சாமி படத்திற்கு முன்பாக வைத்து–விடுமாறும் தெரிவித்துள் ளார். அதன்படி தேவகி நகையை கழற்றி வைத்ததும் பின்னால் சென்ற கில்லாடி பெண் அதனை அபேஸ் செய்துவிட்டு தலைமறை–வானார். நகையை பறிகொடுத்த தேவகி கொடுத்த புகாரின் பேரில் நூதன திருட்டில் ஈடு பட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள்
    • 3 பவுன் செயினை போலீசார் பறிமுதல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தென்றல் நகரைச் சேர்ந்தவர் அன்பரசன். அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இளமதி(வயது 33). இவர், தருமபுரியில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் கணவன் மனைவி இருவரும் பைக்கில் திருப்பத்தூரில் இருந்து தென்றல் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இளமதி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து இளமதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் (25) மற்றும் கணபதி(38) ஆகியோர் இளமதியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். மேலும் வாலிபர்களிடமிருந்து மூன்றரை பவுன் செயினை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே இளம்பெண்ணிடம் 6¾ பவுன் நகை திருடப்பட்டது
    • இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வடக்கு புதிய தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். மனைவி வித்யா(வயது33). இவர் நேற்று மாலை உறவினர் வீட்டு விஷேசத்திற்கு புறப்பட்டார். ராமநாதபுரம் வடக்கு தெருவில் உள்ள தனியார் மகாலுக்கு அருகே தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென வித்யா கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6¾ பவுன் தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பஜார் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மருதுபாண்டியன் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • ஆறுமுகம். வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு தங்கம்மாள் (வயது 72) என்ற மனைவி உள்ளார்.
    • கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார்.

    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு தங்கம்மாள் (வயது 72) என்ற மனைவி உள்ளார். இன்று காலை 10.30 மணி அளவில் தங்கம்மாள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தங்கம்மாளிடம் விலாசம் கேட்பது போல் பேசியவாறூ அவரது கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கம்மாள் கூச்சலிட்டார்.

    இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்ற வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இதுகுறித்து தங்கம்மாள் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளை யர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    ×