என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jk ritheesh
நீங்கள் தேடியது "JK Ritheesh"
மரணம் அடைந்த முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீசின் உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். #JKRitheesh #RIPJKRitheesh
ராமநாதபுரம் :
ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.யும், நடிகருமான சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்தீஷ் (வயது 46) ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானார். தி.மு.க. சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆன ரித்தீஷ், 2014-ல் அ.தி.மு.க.வில் இணைந்து மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக இருந்தார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றிலும் பொறுப்புகளில் இருந்தார்.
ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரித்தீஷ் உடல் வைக்கப்பட்டு இருந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி. ஆகியோர் அஞ்சலி செலுத்தி, ரித்தீசின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதே போல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன்,
சினிமா இயக்குனர் மனோபாலா, நடிகர்கள் ராதாரவி, கார்த்தி, சின்னிஜெயந்த், போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி, பரோட்டா சூரி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலை ராமநாதபுரம் அருகே நயினார் கோவிலை அடுத்துள்ள அவரது சொந்த ஊரான மணக்குடி கிராமத்தில் ரித்தீசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. #JKRitheesh #RIPJKRitheesh

×

X