என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kadambakulam"
- 1796-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கடம்பாகுளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
- கடம்பா குளத்தின் கீழ் அம்மன்புரம் குளம் உள்ளிட்ட 12 குளங்கள் உள்ளன.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் நெல்லை- திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தென்திருப்பேரை பேரூராட்சி உள்ளது. நெடுஞ்சாலையில் இருந்து 1கிலோ மீட்டர் தூரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திலே தாமிரபரணி ஆறு பாயும் பகுதியில் மிகப் பெரிய குளமாக கடம்பா குளம் அமைந்துள்ளது. கடலில் பாதி கடம்பா என்றும் மக்கள் அழைப்பதுண்டு.
இக்குளம் 350 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டுவதற்கு முன்பே கடம்பாகுளம் அமைந்துள்ளது என்பதை சென்னை மாகாண அரசின் நடவடிக்கைக் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடம்பாகுளத்தின் நிறை நீர்மட்டம் 8.960 மீட்டர் ஆகும். குளத்தின் நீர்மட்டம் 8.030 மீட்டராக இருக்கும் போதுதான் கடம்பாகுளத்துக்கு கீழே உள்ள 12 குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும். 250 கனஅடி நீர் தென்காலில் வழங்கினால் கடம்பாகுளம் நிரம்புவதற்கு 16 நாட்கள் ஆகும்.
நீர்வளத் துறை அலு வலர்களின் தகவல் படி 1796-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கடம்பாகுளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது கடம்பாகுளத்தை தூர்வாரி பழுது பார்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டா லும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணைக் கட்டு தென்கால் வாயின் முதல் குளம் கடம்பா குளம் ஆகும். இக்குளத்தின் கீழ் அம்மன்புரம் குளம், நல்லூர் மேல குளம், கீழக்குளம், காணம் குளம், ஆறுமுக நேரி குளம், சீனிமாவடி குளம், மாதா குளம், நாலாயிர முடையார் குளம், துலுக்கன் குளம், வண்ணார்குளம், ஆவுடை யார் குளம், எல்ல ப்பநாயக்கன் குளம் ஆகிய 12 குளங்கள் உள்ளன. ஆத்தூர் குளம் மற்றும் சேதுக்குவாய்த்தான் குளம் ஆத்தூரான் கால்வாய் வழியாக தண்ணீர் பெறுகிறது.
கடம்பாகுளத்தின் நேரடி பாசனம் மூலம் தென்திருப்பேரை கஸ்பா, குருகாட்டூர், புறையூர், ராஜபதி, அங்கமங்கலம், சுகந்தலை போன்ற கிராம விவசாய மக்கள் சுமார் 4,076 எக்டேர் விவசாய விளைநிலங்களுக்கு நீர் ஆதாயம் பெற்று விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நன்செய் விவசாய விளைநிலங்களில் 4-ல் ஒரு பகுதி கடம்பா குளம் மூலம் பயன் பெறுகின்றது. இக்குளத்தில் நீர் இருப்பு இருந்த காலங்களில் ஐரோ ப்பியன் விகான், நார்தன் பின்டெய்ல், சோவிலர் அனஸ் சிலிபிடா உள்ளிட்ட 44 இன குளிர் கால பறவைகள் டிசம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை இங்கே தங்கி இருந்ததாகவும், இதற்கான சான்றுகள் அரசிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
1954 ஜூலை 13-ந் தேதி கடம்பாகுளம் ஆயக்கட்டுதார்கள் விவசாய அபிவிருத்தி சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு தனியே ஒர் சங்கத்தை உருவாக்கி கால்வாய்களை சீரமைப்பு செய்து வந்து ள்ளனர். தற்போது அந்த சங்கம் செயல்படுவதாக தெரிய வில்லை. அந்த சங்க கட்டிடம் இன்றும் தென்திரு ப்பேரையில் உள்ளது.
தற்போது அரசால் கடம்பாகுளத்தின் கரைகள் மற்றும் மடைகள் சீரமைப்பு பணிக்காக நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடையாத நிலையில் அந்த பணி தரமற்ற முறையில் நடைபெற்றுள்ளதாக பெரு ம்பாலான விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.
கடம்பாகுளத்தை தூர் வார வேண்டும். அந்த பணிகளை மழைகாலம் தொடங்கும் முன்பே தொடங்கி குளத்தை தூர் வாரி குளத்தின் கரைகளை பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கடம்பா குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்