search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadampur Raja MLA"

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோவில்பட்டியில் நடைபெற்றது.
    • விரைவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா கோவில் பட்டியில் நடைபெற்றது.

    முன்னதாக தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் எதிரே உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு அ.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதைத்தொடர்ந்து, கட்சி உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார். அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், சின்னப்பன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, நகரச் செயலர் விஜயபாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், வழக்கு ரைஞர்கள் சிவபெருமாள், சங்கர்கணேஷ், அதிமுக நிர்வாகிகள் நீலகண்டன், ஆப்ரகாம் அய்யாத்துரை, ராமர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    பின்னர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் விரிசலும் இல்லை. கூட்டணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர்களது இடத்தில் எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறோம்.

    பா.ஜ.க. சார்பில் கோவில்பட்டியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. இதற்காக பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் வருத்தத்தை தெரிவித்தனர். விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தெரிவித்தோம்.

    ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இனிமேல் சட்ட ரீதியாக சந்திக்க உள்ளோம்.

    எடப்பாடியிடம் தான் அ.தி.மு.க. உள்ளது. அதன் முதல்கட்டமாக கட்சி உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    விரைவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    கோவில்பட்டியில் இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.2 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி மற்றும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் 133 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிகளுக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

    அந்த பணிகளை விரைவில் தொடங்க உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினேன். விரைவில் அதற்கு அனுமதி தருகிறோம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மொத்தத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமல்ல கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், அரசாணைகளை கூட செயல்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×