என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kamalhaasan
நீங்கள் தேடியது "Kamalhaasan"
மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை இன்று சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக தெரிவித்தார். #KamalHaasan #KamalHaasancampaign #Andamancampaign #TMCcampaign #TMCcandidate
கொல்கத்தா:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கொல்கத்தாவில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
தனது குறுகியகால அரசியல் பயணத்தில் மூன்றாவது முறையாக மம்தாவை சந்தித்த கமல், நாட்டுநடப்பு உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், ’இன்றைய ஆலோசனை மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்தமான் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம்பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவு மேலும் பலப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
அந்தமானில் போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளருக்காக நான் அங்கு சென்று பிரசாரம் செய்வேன்’ என்று குறிப்பிட்டார்.
அந்தமான் நிக்கோபர் தீவில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பிஷ்னு படா ராய் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #KamalHaasan #KamalHaasancampaign #Andamancampaign #TMCcampaign #TMCcandidate
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் `இந்தியன் 2' படம் பணப் பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் இரு வேடங்களில் நடித்த இந்த படத்தில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக தன் மகனையே கொல்லும் சுதந்திர போராட்ட வீரராக நடித்து இருந்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற இதன் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர்.
இந்தியன் 2 என தலைப்பிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பட பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே இல்லாமல் நிற்கிறது.
படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப்போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக பொருந்தவில்லை என்கிறார்கள். அவருக்கு மேக்கப்பினால் அலர்ஜியாகி உள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு, தயாரிப்பு நிறுவனம் பணத்தை தயார் செய்துவருகிறது. அந்த நிறுவனம் சீனாவில் வெளியிடும் 2.0 படம் வெளியானால் நல்ல பலன் தரும் என்று காத்திருக்கிறார்கள்.
மீண்டும் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களிடம் தேதிகள் வாங்க வேண்டும். தற்போதைக்கு தேர்தல் முடியும் வரை கமல், தன் அரசியல் பயணத்தில் பிசியாகி உள்ளார். இதனால், தேர்தல் முடிந்து கமல் மீண்டும் நடிக்க திரும்ப வேண்டும். அதற்குள் அவரும், தன் உடலை ‘இந்தியன்2’ படத்துக்காக மாற்ற வேண்டும்.
இந்த தகவல்களை எல்லாம் வைத்து படக்குழுவிடம் விசாரித்தால், “எவ்வித பிரச்சினையுமே இல்லையே. மீண்டும் விரைவில் தொடங்குவோம்“ என்கிறார்கள்.
படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை. #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar
ரஜினி, சீமான் ஆதரவு தனக்கு இருக்கும் என்று நம்புவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
ஆலந்தூர்:
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.
ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.
வேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.
எங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.
அதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்
எங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
நான் மக்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் அமைதியாக என்னுடைய கருத்துக்களை கேட்டார்கள். கை தட்டி ஆர்ப்பரிக்காமல் யோசிக்க ஆரம்பித்தார்கள். அது நன்றாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது. நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இருந்தது. மக்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒத்துப்போனது.
இதே போல் பல இடங்களில் உள்ள மக்களின் கருத்தும் ஒத்துப்போக ஆசையாக இருக்கிறது. இதுவரையில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். நாங்கள் ஒரு அணி. எங்களிடம் நேர்மையானவர்கள் சேரலாம். இதுவெறும் அழைப்பு தானே தவிர, சுயநலமோ, யுக்தியோ கிடையாது.
ரஜினி, சீமான் ஆதரவு எனக்கு இருக்கும் என்று நம்புகிறேன். ஆதரவு என்பது அவர்கள் விரும்பி தர வேண்டும். நான் 3-வது அணி என்று சொல்லவில்லை.
வேட்பாளர் தேர்வு நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. விருப்ப மனுக்கான அறிவிப்பு நாளை வெளிவரும். டாக்டர் தமிழிசைக்கு நான் பேசுவது திரைப்பட வசனம்போல் இருக்கிறது என்பதற்கு காரணம் என்னையும் திரைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து பார்ப்பதுதான்.
எங்களுடைய தேர்தல் அறிக்கை கவர்ச்சியாக இருக்காது. நாங்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. நேர்மைக்கும் உணர்ச்சிக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.
அதை நோக்கிதான் எங்கள் தேர்தல் அறிக்கை இருக்கும். தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் அவசரமில்லை. கூடிய சீக்கிரம் அறிவிப்போம். செய்யப்போவதை தான் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுப்போம்
எங்களுடைய பலம் மக்கள் தான். நாங்கள் அதை நோக்கி பயணிக்கிறோம். யாருடன் கூட்டணி சேர்ந்தால் காசு வரும், ஓட்டு கிடைக்கும் என்று நினைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படுவோம். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரவேண்டும் என்றால் ஏன் வரவில்லை என்று கேள்வி கேட்கலாம். வந்தால் ஒரு சிறிய நன்றி சொல்லலாம்.
பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் பரீட்சை என்றுதான் சொன்னேன். சோதனை என்று சொல்லவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்தது அ.தி.மு.க. அதனால் ரஜினி ரசிகர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு தான் என்று ஒரு நாளிதழில் செய்தி வந்திருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டபோது, “எந்த தண்ணீர் என்று தெரியவில்லை” என்று கமல் பதில் அளித்தார். #MakkalNeedhimaiam #KamalHaasan #Rajinikanth
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் பற்றி வரும் வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #Indian2 #Kamal #Kamalhaasan
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. சில காட்சிகளை படமாக்கியதும் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகவும், பின்னர் கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த 2.0 படத்தையும் லைகா பட நிறுவனமே தயாரித்தது.
அந்த படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜி ஒப்பந்தமாகி இருக்கிறார். #Indian2 #KamalHaasan #RJBalaji
இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசனுடன் நடிக்க காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்துக்கு அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரை ஷங்கர் அணுகியதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை யாருமே அந்த கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படவில்லை. தற்போது கமலுக்கு வில்லனாக நடிக்க அஜய் தேவ்கன் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனக்குப் பரிச்சயம் இல்லாத மொழிகளில் நடிப்பதில்லை என்பதால் மட்டுமே முடியாது என அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். `இந்தியன்’ முதல் பாகத்தில் சேனாதிபதியாக நடித்த கமல் இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் தொடர்கிறார்.
சேனாதிபதியைப் பிடிக்க முயலும் போலீஸ் வேடத்தில் நடித்த நெடுமுடி வேணுவும் அதே வேடத்தில் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். நெடுமுடி வேணுவின் உதவியாளராக இருக்கும் போலீஸ் வேடத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Indian2 #KamalHaasan #RJBalaji
திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சேர்க்க காங்கிரஸ் விரும்பியது.
இதற்கிடையே, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியிருந்தார்.
இந்நிலையில், திமுகவை குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேஎஸ் அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை.
அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக மீதான விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்குதான் உதவும்.
எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri #KamalHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் `இந்தியன் 2' படத்திற்கு இசையமைக்காதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டதற்கு, அவர் விளக்கம் அளித்துள்ளார். #Indian2 #KamalHaasan #ARRahman
‘இந்தியன்’ படத்துக்கு இசை அமைப்பாளராகப் பணிபுரிந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியன் 2-ம் பாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியாதது குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் பணிபுரியாதது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
‘இந்தியன் 2’வில் நான் பணியாற்ற வேண்டும் என்று கமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். டைரக்டர் சொல்லவேண்டும் என்று கூறினேன். ஷங்கர் எப்போதுமே புதிய விஷயங்களை தேடிச் செல்வார். தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால் போர் அடித்துவிடும் இல்லையா? ஏற்கனெவே ‘அந்நியன்’, ‘நண்பன்’ ஆகிய படங்களைப் போல இது ஒரு சிறிய பிரேக். அவ்வளவுதான்’. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தின் மூலம் ஷங்கர், கமல்ஹாசனுடன் முதல்முறையாக அனிருத் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Indian2 #KamalHaasan #ARRahman #Shankar #Anirudh
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சமீபத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இந்த படம் கமல்-ஷங்கர் இணைந்து பணியாற்றிய ஒரே படம்.
தற்போது 22 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடல் அமைப்பை மாற்றி அமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஐதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்து இருந்தது. எழுத்தாளர்கள் ஜெய மோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதி உள்ளனர்.
படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
அந்த காட்சிகளை பார்த்த ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். #Indian2 #KamalHaasan #Shankar #KajalAggarwal
என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று இளையராஜா விழாவில் ரஜினி பேசிய நிலையில், ரஜினி ஆதங்கத்துக்கு இளைராஜா பதில் அளித்துள்ளார். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு திரை உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த் இளையராஜாவுடன் கலந்துரையாடினார்.
ரஜினி பேசும்போது ‘இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ என்றார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.
அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?
‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.
இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.
சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்...’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா... சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.
இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.
கடைசியாக முடிக்கும் போது நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே...’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.
பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.
இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான். விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.
சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இளையராஜாவுடன் அவரது தொடக்கத்தில் இருந்து பயணித்த பாரதிராஜா, வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, கங்கை அமரன் போன்றோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார். #Ilayaraja75 #Rajinikanth
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75வது பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.
2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.
இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.
பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.
நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.
ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.
டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.
மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும். ‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.
‘பொதுவாக என் மனசு தங்கம்...’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்...’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மகள் ஸ்ருதியுடன் இணைந்து ‘ஹேராம்’ மற்றும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட பாடல்களை மேடையில் பாடினார்.
விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
‘இந்தியன் 2’ படத்தில் ஆர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்தில் இளைஞர் படை மூலம் கமல்ஹாசன் ஊழலை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan #Arya
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், சிம்பு, சித்தார்த், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக படக்குழுவினர் தெரிவித்த கருத்து:- ‘இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஒரு வேடமா, 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது. ஆனால் கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் சேனாதிபதி வேடத்தில் நடிக்கும் காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன.
முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே வந்து இளைஞர்கள் படையை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்புவுக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆர்யாவிடம் பேசி உள்ளோம்.
படப்பிடிப்புக்கான தேதிகளை முழுமையாக முடிவு செய்த பின் தான், யாரெல்லாம் நடிக்க உள்ளார்கள் என்பதை முறையாக அறிவிப்போம். வில்லனாக இந்தி சினிமாவின் முன்னணி நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது”
இவ்வாறு கூறினர்.
கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவண குமார் இணைந்து ‘இந்தியன் 2’ படத்துக்கான வசனங்களை எழுதி உள்ளனர். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Siddharth #Arya
நவாசுதீன் சித்திக் நடிப்பில் தாக்கரே படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், ரஜினி, கமலை ஒப்பிட வேண்டாம் என்றும், மீண்டும் கமலுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். #NawazuddinSiddiqui
பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக், தாக்கரே படத்தில் பால் தாக்கரேவாக நடித்து அசத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது தாக்கரே படத்தில் நடித்தேன். இதற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதை எல்லாம் உள்வாங்கி கொள்ளவேண்டும். உடன் நடித்த நடிகர்களில் தமிழில் விஜய் சேதுபதியையும், ரஜினியையும் ரொம்பவே பிடித்தது. ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்ய ஆசைப்படுகிறார். அதையே செய்கிறார்.
இது பெரிய விஷயம். கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம் கமல் மிகச்சிறந்த நடிகர். கமலின் ஹேராம் படத்தில், ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் கமலுக்கு இந்தி பயிற்சியாளராக பணிபுரிந்தேன். அவருடன் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’. இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். #NawazuddinSiddiqui #Thackeray #Rajinikanth #KamalHaasan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X