என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kamaraj Women's College"
- மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- 189 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.
தூத்துக்குடி:
உலக சதுரங்க சங்கம் சார்பில் உலக நாடுகளுக்கிடையேயான 44-வது ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி தமிழக அரசின் முழு நிதி உதவியுடன் அகில இந்திய சதுரங்க கழகம் மூலம் மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 189 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
மாணவர்களுக்கு சதுரங்க போட்டியினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சதுரங்க போட்டியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவர்களை ஊக்குவித்து, அந்த மாணவர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கும் நோக்கத்தில் நமது தமிழக அரசு, சதுரங்க சங்கங்கள், உடற்கல்வி ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
இதன் முதற்படியாகக் கல்லூரிக் கல்வித்துறை, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக காமராஜ் மகளிர் கல்லூரியில் சதுரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சதுரங்கப் போட்டியில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுடன் பார்வையாளர்களும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சதுரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ, கன்னியாகுமரி மாவட்டம் விளையாட்டு விடுதி மேலாளர் ராஜேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயரத்தினராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டியினை மக்களிடையே கொண்டு சேர்க்கும் ஒரு நிகழ்வாக தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் சதுரங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சதுரங்க போட்டியும் நடத்தப்பட்டது. சிறப்புமிக்க சதுரங்க வீரர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை காமராஜ் மகளிர் கல்லூரியுடன் மாவட்ட நிர்வாகம் மாவட்ட சதுரங்க கழக நிர்வாகத்தின் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்