என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kanchi School"
- பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவராக மாணவர் திவி கார்த்திக் தேர்ந்தெ டுக்கப்பட்டார்.
- மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் மற்றும் சூழலியல் நிபுணர் கோவை சதாசிவம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் செல்வ வைஷ்ணவி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி செண்பகராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவராக மாணவர் திவி கார்த்திக், துணைத்தலை வராக மனோசங்கர், செயலாளராக மாணவி சுந்தரி, துணைச்செய லாளராக அட்சயா ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் அரசி அறிமுகம் செய்தார். தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் விருந்தினர்கள் முன்னிலை யில் மரக்கன்று கள் நடப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தொடர்பாக மாணவ-மாணவிகள் சிறப்பு விருந்தினரிடம் கலந்துரையாடல் நடத்தினர். முடிவில் சுற்றுச்சூழல் மன்றத்தின் செயலாளர் சுந்தரி நன்றி கூறினார்.