search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karur farmer"

    திருப்பதி சென்று திரும்பிய கரூர் விவசாயி பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    கரூர் மாவட்டம் ராச்சாண்டர் திருமலை அருகே யுள்ளது ஆர்ச்சம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் கடந்த வாரம் திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு சென்று திரும்பினார். வீட்டிற்கு வந்தவுடன் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. 2 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் ரவிச்சந்திரனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் பரவி வருவது திருச்சி-கரூர் மாவட்ட பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ×