என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kattumannarkoil"
- கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
- வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.
இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. அதாவது வீராணம் ஏரியின் மொத்தமாக 1465 கன அடி நீர் தேக்கி வைக்கமுடியும். இதில் 1343.50 கன அடி நீர் தற்போது உள்ளது.
மேலும், வீராணம் ஏரி நிரம்பியதால் கீழணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. மேலும், நேற்று இரவு காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 மி.மீ. மழை பதிவாகியது.
இதனால் ஏரிக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடை நடைபெறுவதால் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அரசு மணல் குவாரி யாடு உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்டமங்கலத்தை சேர்ந்த பால முருகன் (வயது 37) மற்றும் பாலச்சந்திரன் (36) ஆகிய 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டனர். பணியில் இருந்த காட்டு மன்னார்கோவில் தலைமை காவலர் சண்முக சுந்தரம், ஏன் இங்கு நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகிறீர்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், பால சந்திரன் ஆகியோர் சேர்ந்து தலைமை காவலர் சண்முகசுந்தரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து காட்டு மன்னார் கோவில் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குபதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், பாலசந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
காட்டுமன்னார் கோவிலை அடுத்த ருத்திரசோலை கிராமத்தை சேர்ந்தவர் அருலரசு (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 2 மகள்களுடன் விஜயலட்சுமி ருத்திரசோலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து விஜயலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள், உறவினர்கள் பல இடங்களில் விஜயலட்சுமியை தேடினர். எங்கும் அவர் இல்லை.
இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகிறார். 2 மகள்களின் தாய் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீரானந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகள் திவ்யா(வயது22).
இவர் நர்சிங் படித்துவிட்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலைபார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று காலை திவ்யா வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.
இதனைதொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் திவ்யாவின் தாய் சுமித்ரா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண் திவ்யா எங்கு சென்றார் என தேடிவருகிறார்.
ஸ்ரீமுஷ்ணம்:
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அளிஞ்சமங்கலம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 34) என்பவர் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்தார்.
இதையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்