search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayalpatinam"

    • கவாஸ்கரும் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • கடற்கரை அருகே உள்ள மரத்தில் கவாஸ்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் சிங்கித்துறையை சேர்ந்தவர் அந்தோணி (வயது 60). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு ராணி என்ற மனைவியும், கவாஸ்கர் (31) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கவாஸ்கரும் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கவாஸ்கர் வீட்டிற்கு வரவில்லை. காலையில் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது கடற்கரை அருகே உள்ள மரத்தில் கவாஸ்கர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கவாஸ்கரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நல வாரியம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நல வாரியம் குறித்த விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது.

    காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஒருங்கி ணைப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ்நாடு வக்பு வாரியம் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த முகாமில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம், உலமாக்கள் ஓய்வூதியம், இலவச சைக்கிள், இரு சக்கர வாகனத்திற்கான மானியம் மற்றும் தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்கும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவற்றிற் கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    முகாமில் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலருமான விக்னேஸ்வரன், தமிழ்நாடு வக்பு வாரிய நெல்லை சரக ஆய்வாளர் நூர் ஆலம் இப்ராஹிம் ஆகியோர் தலை மையில் சம்பந்தப்பட்ட துறை களின் அதிகாரிகள் பலர் பணிகளை செய்தனர்.

    காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பிதுரை, செயலாளர் வாவு சம்சுதீன், துணைச் செயலாளர் நவாஸ் அகமது, துணி உமர், கலீல் ஹாஜி, கைலானி சதக் தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செய லாளர் காயல் மகபூப், த.மு.மு.க. நகரத் தலைவர் ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் . இவர் படகை கடற்கரையில் நிலை நிறுத்தும்போது அலையின் வேகம் காரணமாக அந்த படகு ஜெனோஸ்டன் மீது பலமாக மோதியது.
    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் (வயது 23). இவர் படகை கடற்கரையில் நிலை நிறுத்தும்போது அலையின் வேகம் காரணமாக அந்த படகு ஜெனோஸ்டன் மீது பலமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது குடும்பத்தினரை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் வழங்கினார்.

    மேலும் அரசு உதவிகளை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    அப்போது அவருடன் தி.மு.க. முன்னாள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுகு ரங்கநாதன், சிங்கித்துறை ஊர் தலைவர் அன்றன், வார்டு கவுன்சிலர் அஜ்வாது, நகர தி.மு.க இளைஞரணி செயலாளர் கலிலூர் ரகுமான் ஆகியோர் இருந்தனர்

    ×