search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala fisher merchant"

    தொண்டி சோதனைச் சாவடியில் கேரள மீன் வியாபாரியிடம் ரூ. 2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls

    தொண்டி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் பணம் கொண்டு செல்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் கொண்டு செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் நள்ளிரவில் தேர்தல் பறக்கும் படையினர் தாசில்தார் ராமசாமி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் பயணம் செய்தவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே ரூ. 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காரில் பயணம் செய்தவர் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஆண்டோ (45) என்பது தெரியவந்துள்ளது. #LSPolls

    ×