என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kerala love couple"
- பஸ்சின் முன் நின்றும், அமர்ந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
- பேருந்து எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று.
இளமைக்காலத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் வரக்கூடிய காதல் தனித்துவமானதாக இருக்கும். அது அவர்களை ஒருவித பரவசத்தில் ஆழ்த்திவிடும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
காதல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் மனிதப் பிறவியான நாம் புனிதமானதாக கருதும் ஒன்றாக இருக்கிறது.
இப்படிப்பட்ட காதல் சிலருக்கு பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் போதோ, சிலருக்கு பணிபுரியும் போது கிடைக்கும் நட்பின் மூலமாகவே கிடைக்கிறது.
காதலில் உண்மையாக இருந்து திருமண வாழ்வில் இணைபவர்கள், தங்களின் காதல் உருவாக காரணமாக இருந்த விஷயத்தை என்றும் மறப்பதில்லை.
தாங்கள் முதன்முதலாக சந்தித்த இடம் உள்ளிட்டவற்றை மீண்டும் பார்க்கும் போது சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷத்தை அனுபவிப்பார்கள்.
செல்போன்களின் பயன்பாடு, போட்டோ-சூட் கலாச்சாரம் அதிகமாக இருக்கும் தற்போதைய நவநாகரீக காலத்தில் திருமணமான பிறகு முன்பு சென்றுவந்த இடங்களுக்கெல்லாம் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களின் பொக்கிஷமாக வைத்துக்கொள்வார்கள்.
அப்படித்தான் ஒரு காதல் ஜோடி, தங்களது காதலுக்கு அடித்தளமாக இருந்த அரசு பஸ்சை திருமணமான கையோடு சென்று பார்த்திருக்கிறார்கள்.
மேலும் அந்த பஸ்சின் முன் நின்றும், உள்ளே அமர்ந்தும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள். கேரள மாநிலத்தில் நடந்த அந்த உணர்வுப் பூர்வமான நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் சீனிவிளை பகுதியை சேர்ந்த நித்யானந்தன்-கீதாமணி தம்பதியரின் மகன் அமல். இவரது ஊருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை பஸ் வசதி கிடையாது.
அப்போது மாணவ பருவத்தில் இருந்த அமல், தனது ஊருக்கு அரசு பஸ்சை இயக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
அனால் அவரது மனு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருந்தது. இருந்தாலும் எப்படியாவது தனது ஊருக்கு பஸ்சை பெற்றுவிடவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்த அமல், தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தபடி இருந்தார்.
அதன் பலனாக அவரது ஊருக்கு பஸ் வசதியை அரசு ஏற்படுத்தி கொடுத்தது. அனப்பாடு-சீனிவிளை வழித்தடத்தில் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் சீனிவிளை மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. அந்த பஸ் சீனிவிளை பகுதி மக்களின் உயிர்த்துடிப்பாக மாறியது.
அந்த அளவுக்கு ஊர் மக்கள் அந்த பஸ்சை பயன்படுத்தி வந்தனர். அவர்களுடன் வாலிபர் அமலும் தினமும் கல்லூரிக்கு அந்த பஸ்சிலேயை சென்று வந்தார். தனது விடாமுயற்சியால் கிடைத்த அந்த பஸ்சில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் பயணித்து வந்தார்.
அப்போது தான் அபிஜிதாவை அவர் முதன் முதலாக பார்த்தார். அவரை பார்த்தவுடன் அமலுக்கு பிடித்துவிட்டது. பஸ் பயணத்தால் அவர்களுக்குள் கிடைத்த நட்பு, பின்பு காதலாக மாறியது. இந்த நிலையில் அமலுக்கு வெளியூரில் வேலை கிடைத்தது.
வேலைக்கும் அந்த பஸ்சிலேயே தினமும் சென்றுவந்தார். அதே பஸ்சில் அபிஜிதாவும் தினமும் பயணித்தார். இதனால் அவர்கள் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர். காதலில் உறுதியாக இருந்த அவர்கள், திருமண வாழ்வில் இணைய முடிவு செய்தனர்.
அவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதித்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. தங்களை அறிமுகப்படுத்திய, தங்களுக்கிடையே காதல் உருவாக காரணமாக இருந்த அரசு போக்குவரத்து கழக பஸ்சில் திருமண கோலத்தில் பயணிக்க ஆசைப்பட்டனர்.
இதனால் திருமணம் முடிந்த கையோடு அவர்கள் இருவரும் கழுத்தில் மாலையோடு பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களுக்குள் அறிமுகத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் காதலித்த போது தாங்கள் பயணித்ததை போன்று, பஸ்சுக்குள் அமர்ந்து பயணித்தனர்.
புதுமண ஜோடியின் இந்த செயல் சீனிவிளை பகுதி மக்களை மட்டுமின்றி, அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்ட அரசு பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரையும் ஆச்சரியமடையச்செய்தது.
இது குறித்து அமல் கூறும்போது, "இந்த பேருந்து எனது வாழ்க்கையில் நிலையான ஒன்று. நான் நினைத்துப் பார்க்காத வழிகளில் எனது பயணத்தை வடிவமைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பேருந்து மக்களுக்கு மிக முக்கியமான பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது என்பதே சரியானதாகும்" என்றார்.
சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் 16-வது பிளாட்பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் மயங்கிய நிலையில் கிடந்தனர். போலீசார் அவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காதல் ஜோடியான இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரிய வந்தது.
வாலிபரின் பெயர் அபிஜித். இளம்பெண்ணின் பெயர் ரூஷ்னா. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கூட்டுமடத்தைச் சேர்ந்த அபிஜித்தும், நெல்லிகுழி பகுதியைச் சேர்ந்த ரூஷ்னாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சென்னை வந்து தற்கொலைக்கு முயற்சித்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CentralRailwayStation
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்