search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kerala woman death"

    கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்ட கேரள பெண் வழக்கில் கைதானவர் வெளியில் நடமாடுவதாக எழுந்த பிரச்சினையால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் எம்.எம். தெருவைச் சேர்ந்தவர் ரோகினி (வயது 42). கேரளாவைச் சேர்ந்த இவர் தனது கணவர் மற்றும் 9 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கணவர் மற்றும் 2 மகன்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். 7 மகள்களுடன் ரோகினி தனியாக வசித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

    தான் இறப்பதற்கு முன்பாக கைப்பட கடிதம் எழுதி வைத்து தனது தற்கொலைக்கு ஜெயசீலன் மட்டுமே காரணம் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து 3 நாட்களுக்கு பிறகு தலைமறைவாக இருந்த ஜெயசீலனை போலீசார் பிடித்து சென்றனர்.

    கைதான ஜெயசீலன் நேற்று கொடைக்கானல் நகரில் சுற்றி வந்ததாகவும் அதன் பிறகு அவரது வீட்டில் மனைவி மற்றும் மகள்களை பார்க்க வந்ததாகவும் தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அவரது வீட்டு முன்பு ஏராளமான பெண்கள் குவிந்தனர். வீட்டுக்குள் இருக்கும் ஜெயசீலனை வெளியே அனுப்புமாறு அவர்கள் சத்தம் போட்டனர். இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஜெயசீலனை கைது செய்து விட்டதாக கூறிய போலீஸ் அவரை தற்போது வெளியில் நடமாட விட்டுள்ளனர். அவர் வீட்டுக்குள் ஒளிந்திருந்ததை நாங்கள் பார்த்தோம்.

    எங்களை பார்த்தவுடன் தப்பி அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். தனது செல்வாக்கை பயன்படுத்தி போலீஸ் பிடியில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரது கொடுமையால் இது வரை பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டம் நடத்திய பெண்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    எனவே ரோகினியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என ஆவேசமாக கூறினர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ×