search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kilambakkam Bus Stand"

    • நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.
    • நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது:-

    புதிய பேருந்து முனையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


    நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகள் 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.

    ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.


    தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வழிவகை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



    • அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம்.
    • கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரப் பகுதியில் உள்ள பஸ் நிலையங்கள் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 1200 பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அதில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் இனிமேல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி 850 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வராமல் கிளாம்பாக்கத்தோடு நின்றுவிடும்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கத்தில் இன்று புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் ஒரு சில வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதனால் உடனே ஆம்னிகளை அங்கிருந்து இயக்க இயலாது. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகு தான் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க முடியும்.

    அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும். அதே போல தென் மாவட்ட பகுதியில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கம் வந்து பின்னர் அங்கிருந்து கோயம்பேடு நிலையத்திற்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.
    • தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

    கிளாம்பாக்கம்:

    போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுககு பேருந்துகள் இயக்கப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    * கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என 280 சர்வீஸ் இயக்கப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்கப்படும்.


    * கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு பேருந்து என மாநகர போக்குவரத்து இயக்கப்படும்.

    * ஏற்கனவே 2386 சர்வீஸ் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 1691 சர்வீஸ் இயக்கப்படுகிறது. மொத்தம் 4077 சர்வீஸ் இயக்ககப்படும்

    * விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, நெல்லை என 6 அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்து அந்தந்த வழித்தடங்களில் இயக்கப்படும்.

    * பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும்.

    * மொத்தம் 1140 புறப்பாடுகளும் பொங்கல் வரை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும். பொங்கலுக்கு பிறகு முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * ஆம்னி பேருந்துகள் இன்றிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடங்கி விட்டார்கள். பொங்கலுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் சேவை கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும்.

    * தேவைப்பட்டால் ரெயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படும்.

    * எனவே பொங்கல் பண்டிகைக்கு பிறகு அனைத்து பேருந்துகளுமே கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கம்.
    • பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து முனையத்தை பார்வையிட்டார்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கம்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    பொங்கலுக்கும் கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்லும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன.

    அதன் பிறகு இணைப்பு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 'மிக்ஜம்' புயலால் பெய்த பலத்தமழை காரணமாக திறப்பு விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. முதல்- அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் தேதி கொடுத்ததும் பஸ் நிலையத்தை திறப்பதற்கான பணிகளை தொடங்கி விடுவோம். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறக்கப்படும்.

    திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' என்று பெயரிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுமான பிரிவு கட்டியுள்ளது. அதற்கு முறையான பணி நிறைவு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுகான வசதிகள் முறையாக இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடித்து பணி நிறைவு சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது.
    • மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுரஅடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையின் போது பஸ்நிலைய முன்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் புதிதாக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முழுவதும் முடிந்து திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது பஸ்நிலையத்துக்குள் பணிகள் முடிந்த பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மீதமுள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது. இதற்காக 3-க்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி முதல் மாடம்பாக்கம் வரையிலும், மாடம்பாக்கத்தில் இருந்து ஆதனூர் சாலை, ஆதனூரில் இருந்து வண்டலூர்-வாலாஜா சாலை இணைப்பு, அய்யஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, போலீஸ் அகாடமி, வனத்துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டது.

    தினமும் 450 பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாகவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்களுக்கான பஸ்நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க ரூ.17 கோடி செலவில்1250 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 750 மீட்டர் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அந்த பணிகளும் முடிந்து விடும்.

    வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். பயணிகள் பொழுது போக்கிற்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாதபடி அனைத்து நடவடிக்கைகளும் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருதி ரூ.13 கோடியில் நவீன காவல் நிலையம் அமைக்கப்படும். தொடர்ந்து மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள்.
    • மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

    90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

    இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையின் போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தின் முன் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய மழைநீர் வெளியேற கால்வாய் வசதி இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தின் முன் பகுதியில் கால்வாய் பணியை முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கால்வாய் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகின்றன. அப்பகுதியில் கல்வெட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முழுமையாக முடிந்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று தெரிகிறது. தீபாவளிக்கு முன்பு புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும் போது பயணிகள் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, கண்காணிப்பு கேமிரா பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் புதிதாக நவீன வசதிகளுடன் போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. இதற்கான டெண்டரை சி.எம்.டி.ஏ. கோரி உள்ளது.

    சுமார் 7,380 சதுர அடி பரப்பளவில் புதிய போலீஸ் நிலையம் அமைய இருக்கிறது. ஒரே இடத்தில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, கண்காணிப்பு கேமிரா மையம், ஆயுதங்கள் வைப்பு அறை, கட்டுப்பாட்டு அறை, கீழ்தளத்தில் கார்கள் நிறுத்தும் இடம், முதல் உதவி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, மொத்தம் 72 போலீசார் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்ற கேட்கப்பட்டு உள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே போலீசார் பயணிகளின் நடவடிக்கையை கண்காணிப்பார்கள். நவீன வசதியுடன் போலீஸ் நிலையம் அமைய உள்ளது. பஸ் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும்.

    • 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.
    • சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ரூ.20 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்க உள்ளது. புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

    3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஓராண்டுக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள், இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சி.எம்.டி.ஏ வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார்.
    • கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் இக்கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
    • சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் கட்டப்பட்டு உள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூரில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்திலும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    புறநகர் பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் முனையம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஸ் பயணிகளுக்கு வசதியாக ஊரப்பாக்கத்துக்கும் வண்டலூருக்கும் இடையே கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று புதிய ரெயில் நிலையம் அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறார்.

    புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் வேலைக்கான டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய ரெயில் நிலையம் கட்டுவதற்கு ரூ.20 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.4 கோடி நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.

    புதிய ரெயில் நிலையத்துக்கான நிலங்கள் ரெயில் பாதையின் இருபுறமும் கிடக்கின்றன. இது தவிர தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. ரெயில் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.

    வருவாய் துறை சார்பில் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த புதிய ரெயில் நிலையம் பஸ் நிலையத்துக்கு இணைப்பாக அமைவது வடசென்னை மற்றும் தென் சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும்.
    • சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென்மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும் மின்சார ரெயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் இருந்து பயணிகள் எளிதாக பஸ்நிலையத்துக்குள் வரும் வகையில் ஆகாய நடைபாலமும் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய போலீஸ் நிலையமும் அமைக்கப்படுகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் வெளியூரில் இருந்து வரும் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்பட உள்ளது. சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களை சென்னை நகருக்குள் விடக்கூடாது என்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு கடிதமும் எழுதி உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இங்கிருந்து இயக்கப்படும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் தென்மாவட்ட பஸ்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே விழுப்புரம் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து வெளியூர் பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துடன் நிறுத்தப்படுவதால் சென்னை மற்றும் புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிளாம்பாக்கத்தில் இறங்கி பல பஸ்கள் மாறி தங்கள் வசிப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    ×