என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kilbhavani canal"
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 477 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து நேற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1700 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.52 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.79அடியாகவும் உள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும்.
- காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்கால் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் எந்திரங்களை கொண்டு வாய்க்கால் கரையில் உள்ள மண்ணை அகற்றி உள்ளனர்.
இதைப்பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். கீழ்பவானி வாய்க்கால் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கருங்கரடுவில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்குள்ள வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பெருந்துறை தாசில்தார் பூபதி, பெருந்துறை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உள்பட பல்வேறு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் நல்ல நிலையில் இருந்த கால்வாயில் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதை மண்ணை கொண்டு பலப்படுத்த வேண்டும் அமைக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த காத்திருப்பு போராட்டம் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை.
காங்கயம் :
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படும் என்ற வதந்தியை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்று கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக பாசன விசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள் கூறியதாவது:- ஈரோடு மாவட்டம், பவானி சாகா் அணையில் இருந்து அமைக்கப்பட்டுள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த வாய்க்கால், மண் வாய்க்காலாக இருப்பதால் அவ்வப்போது ஏற்படும் உடைப்பு மற்றும் கசிவால் கடைமடைக்கு தண்ணீா் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு சாா்பில் திட்டமிடப்பட்டது. இதற்கு விவசாயிகளிடையே பெரும் எதிா்ப்பு கிளம்பியதையடுத்து கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. கான்கிரீட் தளம் அமைக்கப்படாது என்று நீா்வளத் துறை சாா்பில் அதிகாரப்பூா்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுவதாக தற்போது ஒருசிலா் வதந்திகளைப் பரப்பி விவசாயிகளை திசைத்திருப்பி வருகின்றனா். எனவே, இதுபோன்ற வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றனா்.
- கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.
- கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன.
காங்கயம் :
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன.கசிவு நீர் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் பயன் பெறுகின்றன. மண்ணாலான இந்த வாய்க்கால் வெட்டப்பட்டு 70 ஆண்டுகளாகின்றன.எனவே வாய்க்கால் கரைகள் பலவீனமடைந்து அதிக நீர் வீணாவதாக கூறி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் சீரமைப்பு திட்டத்தை அறிவித்து அரசாணை வெளியிட்டனர்.
மண்ணாலான வாய்க்காலில் கான்கிரீட் கரை, தளம் அமைக்காவிட்டால் வாய்க்காலின் தன்மை கேள்விக்குறியாகும் என பொதுப்பணித்துறை, நீர்வளத்துறையினர் , ஒரு பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் கான்கிரீட் தளம், கரை அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும். கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காது. கான்கிரீட் தளம் கரைக்காக மரங்கள் வெட்டப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும் என கூறுகின்றனர்.
முழு அளவில் நீர் திறந்தும் கடைமடை வரை தண்ணீர் செல்வதில்லை. அடிக்கடி கரைகள் உடைப்பு எடுப்பதால், பாசனத்துக்கு தண்ணீர் தர முடியவில்லை எனக்கூறி, கான்கிரீட் திட்டப்பணியை துவங்க நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறையுடன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்காக அ.தி.மு.க., அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யாவிட்டால், வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து கோவை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் முத்துச்சாமியிடம், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.விவசாயிகள் கூறுகையில், மண் கரையை மண்ணாகவே உயர்த்துவதில், எங்களுக்கு முழு உடன்பாடு உண்டு. விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை காக்க தமிழக அரசு கான்கிரீட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து முதல்வர் அரசு தலைமை செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தலைமை பொறியாளர் உறுதியளித்தார்.
- அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது.
- கீழ்பாவனி வாய்க்காலுக்கு 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர். அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86.46 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 578 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து நேற்று மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 5-ம் சுற்று தண்ணீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று 500 கன அடி திறந்து விட்ட பட்ட நிலையில், இன்று கீழ்பாவனி வாய்க்கா லுக்கு வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காளிங்கராயன் பாச னத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்று க்கு 200 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து 2,800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகி றது.
- கீழ்பவானி வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
- வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காங்கயம் :
நீர்வள துறையில், கோவை மண்டலத்தில் கீழ்பவானி வடிநிலை கோட்டத்தில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் அமைந்துள்ளது. இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்த வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதில் 1.03 லட்சம் ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மறவபாளையம் முதல் மங்கலப்பட்டி கிராமம் வரை உள்ள வாய்க்கால் 39 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை கலெக்டர் வினீத் நேரில் சென்று பார்வையிட்டார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி பொறியாளர்கள் சபரிநாதன், குமரேசன் மற்றும் பாசன உதவியாளர்கள் ஆய்வின் போதுஉடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்