என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Koodankulam Nuclear power station"
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.
தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது.இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அணுமின் நிலையத்தில் 3,4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக 300 நாட்களுக்கு மேல் இயங்கிய அணு உலைகள் பராமரிக்கப்படுவது வழக்கம். அதன்படி அணு உலைகளில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கூடங்குளத்தில் உள்ள 2 அணு உலையிலும் மின்உற்பத்தி நடைபெறாமல் இருந்ததால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 2-வது அணு உலைவால்வில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது. மின்உற்பத்தி 600 மெகாவாட்டில் இருந்து 800 மெகாவாட் வரை நடைபெற்றது. மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்ட இருந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு 2-வது அணு உலையில் திடீரென வால்வு பழுது ஏற்பட்டது.
இதையடுத்து அந்த அணு உலை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அணு உலை பழுதை நீரமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறும்போது, 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி செய்வதற்கு டர்பன் ஜெனரேட்டரில் ஒழுங்குப்படுத்துவதற்காக மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வாரம் நடைபெறும். பின்னர் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் நடைபெறும். ஏற்கனவே பராமரிப்பு பணிகள் காரணமாக முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடி வடைந்து அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள 2022 ஆண்டு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. #SupremeCourt #Koodankulam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்