என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KOVAI GH Hospital"
- போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சைக்காக போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- போதை ஒழிப்பு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவுடன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
கோவை:
கோவை அரசு ஆஸ்பத்திரியில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் புது வாழ்வை மீட்டெடுக்கும் வகையில் போதை ஒழிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆலோசனைகள், வழிகாட்டல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மூலம் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் மீட்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கோவையில் போதை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்பு மையத்தை விரிவாக்கம் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
போதை பழக்கத்துக்கு அடிமையாகி சிகிச்சைக்காக போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 15 முதல் 30 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருந்துகளுடன், இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகள், யோகாசனம், தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
தினமும் மனநல ஆலோசகர் மூலம் கவுன்சிலிங் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வார்கள் தொடர் பயிற்சியின் மூலம் அமைதியான மன நிலைக்கு திரும்புகின்றனர். தற்போது இந்த மையத்தில் 10-க்கும் குறைவானவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
ஒரு மாதம் வரை தங்கி சிசிச்சைப் பெற வேண்டியுள்ளதால் பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு வர மறுக்கின்றனர். சிலர் பாதியிலே தப்பிக்கவும் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு உரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது 10-க்கும் குறைவான படுக்கை வசதியுடன் செயல்படும் மையத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. படுக்கைகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படும். மேலும் சிகிச்சை பெறுபவர்களை உற்சாகமாக வைத்துகொள்ளும் விதமாக தொலைக்காட்சி, விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
தவிர டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். விரைவில் போதை ஒழிப்பு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொலிவுடன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
- 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
கோவை:
உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பி ரமணியன், கோவையில் நேற்று ஆய்வு மேற்கொ ண்டார். கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அரவர் கூறுகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட உள்ளதாக கூறினார். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அங்கு போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நோய் பாதிப்புக்கு ள்ளான வர்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கேரளா- தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரை மார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். இங்கு முகங்களிலோ அல்லது முழங்கைக்கு கீழேயோ கொப்பளங்கள் வந்தால் அவர்களை உடனடியாக பரிசோதிப்பது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்