search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna vazhipadu"

    • பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
    • விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    01. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    02. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    03. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

    04. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    05.தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

    06. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

    07.கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

    08.பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

    09.கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    10.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

    11.கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    12. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது, பகவான் கிருஷ்ணன் இப்பூமியில் மானிடராக அவதாரம் செய்த திருநாளாகும்.

    13.தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.

    14.கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அவலை வைத்து நிவேதனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

    15. கண்ணனைக் காணாத கோபியர்கள் பலவிதமாகப் புலம்பினார்கள். அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.

    • இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.
    • வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொருவரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    பாண்டவர்களைக் காக்க கிருஷ்ணர் லீலைகளை நிகழ்த்திவிட்டு, "பாண்டவ தூதப் பெருமாள்" என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்டார்.

    அதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:

    பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார்.

    அவரை அவமானப்படுத்த நினைத்தார் துரியோதனன்.

    அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன் மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான்.

    கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது.

    கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அவர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.

    பாரத யுத்தம் முடிந்த பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார்.

    அப்போது ராஜா, "கிருஷ்ணர் தூது சென்ற போது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும்" என வேண்டினார்.

    ரிஷி கூறிய அறிவுரையின்படி இத்தலத்தில் தவம் செய்து, கிருஷ்ணரின் விசுவரூப தரிசனத்தை அவர் கண்டார்.

    இந்த கிருஷ்ணரின் பெயர் "தூதஹரி" எனப்படும். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வருப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார்.

    25 அடி உயரம் உடைய அவரது சிலை அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறது.

    இந்த பிரமாண்ட சிலை சுதையால் செய்யப்பட்டது. எனவே இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    ஆண்டுக்கு ஒரு தடவை தைலகாப்பு மட்டும் செய்யப்படுகிறது.

    இந்த பாண்டவ பெருமாளை வாசலில் நின்று சற்று குனிந்து பார்த்தால்தான் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும்.

    வித்தியாசமான இவரை அவசியம் ஒவ்வொருவரும் கிருஷ்ண ஜெயந்தியன்று தரிசிக்க வேண்டும்.

    ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள்.

    ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

    எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்த பிரச்சினைகள், துயரங்கள் இருந்தாலும் விலகி விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணர் இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி "விஸ்வபாத யோக சக்திகளை" கொண்டு அருள்கிறார்.

    எனவே இங்கு அடிப்பிர தட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும்.

    சோதனைகளும், துன்பங்களும் விலகும். புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
    • அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    உயரமான வழுக்கு மரம்!

    தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான்.

    இங்குள்ள வழுக்கு மரக்கம்பத்தின் உயரம் 30 அடி.

    ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரண்டு வாரங்களுக்கு முன் சோற்றுக் கற்றாழையுடன் விளக்கெண்ணை கலந்து இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவார்கள்.

    இந்த வழுக்கு மரத்தில் ஏறி பண முடிப்பு பெறுவதை இந்த பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர்.

    திருக்கண்ணமங்கை

    திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் திருக்கண்ணமங்கை என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள மூலவரை 'பத்தராவிப் பெருமாள்' என்பர்.

    பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார்.

    பக்தர்கள் மீது குழந்தை போல அன்பு காட்டுவதால் 'பக்தவத்சலன்' என்றும் பெயர் உண்டு.

    இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

    அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

    இங்கு ஒருநாள் தங்கி, பக்தியுடன் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.
    • அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    கண்ணனுக்கு சனிக்கிழமை

    கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்குரியது சனிக்கிழமை.

    அந்த தினம் கண்ணனை வணங்குவதற்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.

    அனைத்து கிரகங்களும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு கட்டுப்பட்டவையே.

    எனவே, கண்ணனை வணங்கினால் எந்த கிரகமும் துன்பம் தராது.

    கதவே இல்லாத கண்ணன் கோவில்

    கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார்.

    வலது கையில் தயிர் கடையும் மத்தும், இடது கையில் வெண்ணையும் ஏந்தியுள்ளார்.

    தன் கணவர் குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.

    அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள்.

    அந்த விக்கிரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை.

    ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு.

    கர்ப்பகிரகத்தின் நுழைவு வாயில் விஜயதசமி அன்று மட்டுமே திறந்திருக்கும்.

    மற்ற நாட்களில் சன்னதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே கண்ணனைத் தரிசிக்க முடியும்.

    • அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த “ராஸ லீலை’யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார்.
    • இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    கிருஷ்ணர் ஆயர்பாடி பெண்கள் வைத்துள்ள வெண்ணையை திருடும்போது வெண்ணை கீழே சிந்தி அதில் அவன் பாதங்கள் பதிந்து வீடு முழுவதும் கண்ணன் வந்து போனதற்கான கால் தடங்கள் இருக்கும்.

    இதை வைத்தே கண்ணன் வெண்ணை திருடியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்வார்களாம்.

    இருப்பினும், கோபப்பட மாட்டார்கள். கண்ணன் வந்து போனால் அவர்கள் வீட்டு பசுக்கள் நிறைய பால் சொறியும்.

    செல்வம் பொங்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    இந்த தாத்பரியத்திற்காகவே நம் முன்னோர்கள் கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று தங்கள் வீடுகளில் வெண்ணையினால் கண்ணன் பாதங்கள் போடுவதை வழக்கமாக கொண்டனர்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது.

    இப்படி பாதம் வரைவதில் சைவ-வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

    குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.

    அதாவது ஓம் "நமோ நாராயணா" என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய" என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

    16,108 ராணிகளுடன் துவாரகையில் கண்ணன் அரசாட்சி செய்தான். அப்போது நாரத முனிவர், அரசிகள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோர் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

    அதேபோல் பிருந்தாவனத்தில் நடந்த "ராஸ லீலை'யிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் கூட இருந்து ஆடிப் பாடினார்.

    இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து ஆனந்தப்பட்டிருக்கிறார்.

    "இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்க வல்ல மகிமை வாய்ந்த தெய்வக் குழந்தை கண்ணன்' என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று "திருவடிக் கோலம்' இடப்படுகிறது.

    அன்று எல்லோர் இல்லத்திலும் ஒரே நேரத்தில் "கிருஷ்ணரின் அருளாட்சி' இருக்கும். அதாவது கண்ணனின் அருட்சக்தி அங்கே கொலு வீற்றிருக்கும்.

    • இதை ‘கோ இந்தா’ என்றும் பிரிக்கலாம். அப்போது “கோ” என்றால் ‘பசு’ இந்தா’ என்றால் வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும்.
    • கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல “பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்”.

    "பெருமாளைக் கண்டதுமே மனமும், வாயும் "கோவிந்தா" என்றுதான் சொல்லும். "கோவிந்தா" என்று சொன்னால் போனது வராது' என்று அர்த்தமாகும்.

    இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

    கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு.

    இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது "கோ" என்றால் 'பசு' இந்தா' என்றால் வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.

    கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல "பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்".

    எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் நமக்கு பூரணமாகக் கிடைக்கும்.

    கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்", "பூமியை தாங்குபவன்" என்று பொருளாகும்.

    எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள். வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம்.

    • பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங் கடலே, மானுட வாழ்வு.
    • இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது?

    பேராபத்துகள் நிறைந்த கரையில்லாப் பிறவிப் பெருங் கடலே, மானுட வாழ்வு.

    இப்பெருங்கடலை எந்தக் கப்பலைக் கொண்டு எந்த மாலுமியின் உதவியால் கடப்பது?

    நம்மைக் காப்பாற்றக் கருணை உள்ளம் கொண்ட வேதவியாசர் என்னும் மாமுனி 'ஸ்ரீமத் பாகவதம்' என்னும் கப்பலைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

    இக்கப்பலில் ஏற விருப்பமுள்ளவர்கள் சரணாகதி நெறியில் நின்று நித்ய பூஜை, தோத்திர பாராயணங்கள், கர்மானுஷ்டானாதிகள், பகவத் விஷயங்களைக் கேட்டல் முதலியவைகளை சோம்பலின்றி நம்பிக்கையுடன் செய்து வரவேண்டும்.

    அப்படி செய்தால் மனம் தெளிவடைந்த ஓர் நன்னாளில் பிறவிப் பெருங்கடலின் மறுகரையான பகவானுடைய திவ்ய சாசனங்களை அடைய முடியும்.

    அந்தப் பகவானே அருளாயிருந்து கப்பலை ஓட்டிச் செல்வான். நம்மை கரையை அடையச் செய்வான்.

    ஸ்ரீமத் பாகவதம் என்பது ஓர் கற்பக விருட்ஷம். அதன் பெருங்கிளைகள் 12 ஸ்கந்தங்கள். சிறு சிறு கிளைகளாக இருக்கும் மேலான அத்தியாயங்களுடன் அது அடர்ந்து படர்ந்துள்ளது.

    அந்த மரத்தினுடைய இனிய நறுமணம் வீசுகின்ற பூங்கொத்துக்கள் தான், ஸ்ரீவியாச முனிவரால் உபயோகப்படுத்தப்பட்ட பதவின்யாசங்கள், அதன் குலைகள் தான் 3,000க்கும் மேலான செய்யுட்கள்.

    இவ்வாறு விரிந்து பரந்து வளர்ந்திருக்கின்ற பாகவதத்தை படித்து மனதை அதில் லயித்து விட்டால், மோட்சம் என்ற சாம் ராஜ்யத்தை எளிதில் அடையலாம்

    • பூஜைக்குரிய இலை :- துளசி பத்ரம்
    • பூஜைக்குரிய மலர்கள் :- மல்லிகை.

    பூஜைக்குரிய இலை :- துளசி பத்ரம்

    பூஜைக்குரிய மலர்கள் :- மல்லிகை.

    நிவேதனப் பொருட்கள் :- பால், வெண்ணை,

    தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.

    படிக்க வேண்டிய நூல் :-

    கிருஷ்ண அஷ்டோத்ர நாமாவளி,

    கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம்,

    ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி,

    ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள்,

    கீதையின் நன்நெறிகள்

    வசீகரிப்பவன்

    • பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு.
    • வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான்.

    பல்கூட முளைக்காத பாலகிருஷ்ணனுக்கு கடிக்கக் கடினமாக உள்ள சீடை, முறுக்குகளை நிவேதனம் செய்வதில் ஆழ்ந்த உட்பொருள் உண்டு.

    குழந்தையாக இருந்தபோதே பூதனை, சகடாசுரன், தேனுகாசுரன் போன்ற பல அசுரர்களைக் கொன்று உய்வித்தவன் கிருஷ்ணன்.

    அப்படிப்பட்ட விசேஷ ஆற்றல் உடைய குழந்தை என்பதாலேயே, அவன் பிறந்த நாளில் சீடை, முறுக்கு போன்றவற்றை நிவேதனம் செய்கின்றோம்.

    துளசி மாலை

    கண்ணன் துளசி மாலை அணிந்திருப்பான். விஷத்தை முறித்து, உடலுக்கு வெப்பத்தை தரும் சக்தி துளசிக்கு உண்டு.

    கண்ணன் நாகங்களுடன் விளையாடுபவன்.

    ஐந்து தலை நாகத்தின் மீதேறி நடனம் ஆடியவன். குளிர்ந்த மேனியன். எனவே தான், கண்ணன் துளசிமாலை அணிந்து கொள்வான்.

    வீடுகளின் பின்பக்கத்தில் துளசிமாடம் அமைப்பதும் இதனால்தான்.

    பூச்சிகள் நுழையாமல் தடுக்க, நம் முன்னோர்கள் வீட்டின் பின்புறத்தில் துளசிமாடம் வைத்து, அதனை வழிபட்டார்கள்.

    • மதன கோபால்:- அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
    • பார்த்தசாரதி:- அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

    1.சந்தான கோபால கிருஷ்ணர்:- யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    2.பால கிருஷ்ணன்:-தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

    3.காளிய கிருஷ்ணன்:- காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

    4.கோவர்த்தன தாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5.ராதாகிருஷ்ணன் (வேணுகோபாலன்):-வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

    6.முரளீதரன்:- இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

    7.மதன கோபால்:- அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

    8.பார்த்தசாரதி:- அர்ஜூனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

    ×