search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuladheivavazhipaadu"

    • குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம்.
    • அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம்.

    பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவார்கள்.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது.

    நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான்.

    குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.

    சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.

    சில சந்தர்ப்பங்களில் சிலர் குலதெய்வ வழிபாட்டை தொடராமல் விட்டு விடுவர்.

    சில ஆண்டுகள் கழித்து குலதெய்வம் எது என்றே தெரியாமல் போய் விடுவதும் உண்டு.

    இதனால் சோதனைகள் ஏற்படும்போது, குலதெய்வ குற்றமாக இருக்குமோ என்று நினைப்பதுண்டு.

    உடனே அவர்கள் தங்களின் சொந்த ஊர் எது என்று அறிந்து அங்கு அந்தக் கிராமத்தைக் காக்கும் கடவுளே தங்களின் குலதெய்வம் என்று அறிந்து வழிபடுகின்றனர்.

    குலதெய்வத்தை தங்களால் அறிய இயலவில்லை எனில் தெய்வ அருள் பெற்றவர்களிடம் சென்று தங்களின் கோரிக்கையை வைக்கலாம்.

    அவர்கள் தெய்வ அருளினால் உங்களுக்கு வழிகாட்டலாம்.

    சித்தர்களால் அருளப்பட்ட நாடி ஜோதிடம் போன்றவற்றினாலும் தாங்கள் தங்கள் குலதெய்வத்தை அறியலாம்.

    • ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர்.
    • இதன் காரணமாக 2 அல்லது 3 தலை முறைகள் குல தெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள்.

    ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர்.

    இதன் காரணமாக 2 அல்லது 3 தலை முறைகள் குல தெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள்.

    அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குல தெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குல தெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

    சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்கினத்தில்& ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள்.

    அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம்.

    ஐந்தில்& ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம், உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம்.

    • அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
    • அப்படி இல்லாத பட்சத்தில் அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.

    குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் தெரியுமா?

    இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள்.

    அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    அப்படி இல்லாத பட்சத்தில் அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.

    சதுரகிரி அருகில் இருப்பவர்கள்& மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.

    பொதுவாக திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்று வணங்கலாம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர்.

    ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது. மேலும், திருச்செந்தூர் சம்ஹார தலமாகவும் விளங்குகிறது.

    எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

    இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம்.

    திருச்செந்தூர்  குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய தலமாக விளங்குவதால் குலதெய்வத்துக்கு உரிய கோவிலாக கருதப்படுகிறது.

    இது ஒரு கால ரகசிய நுட்பம். பக்தர்கள் அனைவரும், இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

    உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி, நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாக வணங்குவோம்.

    • நாம் முருகனை அரோகரா என அழைக்கின்றோம்.
    • ஒவ்வொரு மனிதனையும் சுற்றி ஒரு ஆரோ வட்டம் உள்ளது.

    முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது.

    திருப்பரங்குன்றம் முருகனின் திருமணம் நிகழ்ந்த தலமாக அமைந்துள்ளது.

    இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் காணும் பேற்றினை அனைவரும் பெறும் வண்ணமே அனைத்து ஆலயங்களிலும் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படடு இறைவனின் பரிபூரண கருணை அனைவருக்கும் கிடைக்கும்படியாக செய்யப்படுகின்றது.

    நாம் முருகனை அரோகரா என அழைக்கின்றோம். ஒவ்வொரு மனிதனையும் சுற்றி ஒரு ஆரோ வட்டம் உள்ளது.

    இந்த ஆரோ வட்டத்தின் வளைவு தான் நம்மை சுற்றியுள்ள ஆரோவை தூண்டும் செயலில் நாம் இருந்தால் நல்ல பண்புகள் நம்மை வந்தடையும். இதைத்தான் அரோ அரா... என முருகனை விழிப்பதன் மூலம் நாம் பெறுகின்றோம்.

    அதில் அடுத்து வரும் சித்திரை மாதம் அக்கினியின் தன்மையை அதிகப்படுத்தும் என்பதை சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அரோ அரா போடும்போது அக்கினித் தாக்கத்தில் இருந்து நம் குலத்தையும் முதலில் நம்மையும் காத்துக் கொள்ள அரோ அரா எனும் பாதுகாப்பு வளையத்தை நமக்கு ஒரு மாதம் முன்பாக அமைத்துக் கொண்டு வாழ்வாங்கு வாழ வழி வகுக்கின்றது பங்குனி உத்திரம். 

    • மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.
    • முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    பன்னாரி மாரியம்மன் கோவில் அக்னி குண்ட விழா மிகவும் புகழ் பெற்றது.

    ஆயிரக்கணக்கானவர்கள் அக்னி குண்டம் இறங்குவர்.

    பங்கு மாத உத்திரத்திறகு முந்தின 15&ம் நாள் இரவு பன்னாரி மாரியம்மனுக்கு பூச்சாற்று நடைபெறும்.

    மறுநாள் வன துர்க்கை அம்மன் புறப்பாடு நடக்கும்.

    இது ஒரு வித்தியாசமான ஊர்வலம்.

    அப்போது சோலகர் என்ற மலைவாசிகளின் வாத்தியங்களும், அருந்ததியர் வாத்தியங்களும் முழங்கும்.

    மலைவாழ் மக்களும் சுற்றியுள்ள வனப் பகுதி மக்களும் பெரிய தனக் காரர்களும் புடைசூழ வந்து நடத்துவர்.

    இந்த ஊர்வலம் 8&ம் நாள் கோவிலுக்கு வந்துசேரும்.

    மறுநாள் இரவு அம்பிகை ஆராதனை செய்து அக்னி கம்பம் போடுவர்.

    பூச்சாற்றின் 15&ம் நாள் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மாட்டு வண்டி, பஸ், சைக்கிள், நடைப் பயணம் என பன்னாரிக்குப் புறப்படுவார்கள்.

    மலர் வகைகள் வந்து குவியும். தங்கக் கவசம் ஆடை, ஆபரணம் பூட்டி அம்மன் அலங்காரம் முடியும்.

    முக்கிய அம்சமான அக்னி குண்ட வழிபாடு நடக்கும். இதில் விளை பொருட்களைக் காணிக்கையாகத் தருவார்கள்.

    இந்தக் கானகத் திருவிழா தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இவ்வளவு சிறப்பாக மக்கள் பெருமளவில் பங்கு பெற்று நடத்துவர்.

    அன்றிரவு சுமார் ஒரு மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெறும்.

    தெப்பக்கிணற்று அருகே உள்ள அம்மனை அழைத்து வந்து அக்னி குண்டம் அருகே இருத்துவர். குண்டம் சமப்படுத்தப்படும்.

    மறுநாள் காலை, பூசாரி பூஜை செய்தபின் முதலில் குண்டம் இறங்குவார்.

    பிறகு வரிசையாய் ஆண்களும் பெண்களும் இறங்குவார்கள். கடைசியாக கால்நடைகளும் குண்டம் இறங்கும்.

    இது இங்கு மட்டும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். 

    • பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது.
    • பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடி சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது.

    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

    ஒவ்வொரு மாதத்தின் பவுர்ணமி வெவ்வேறு சிறப்புகளை நமக்கு தருவதாக அமைகின்றது.

    அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவது தனிச்சிறப்பு.

    பொதுவாக `பங்குனி உத்திரம்' என நட்சத்திரத்துக்கு சிறப்பு தரும் பவுர்ணமி நாள் என்றவுடன் அனைவரது உள்ளமும் குதூகலம் அடையக் காரணம் முருகனுக்கு விழா எடுக்கும் நாள் என்ற சிறப்பை பெறுகின்றது.

    தமிழ் கடவுள் சுப்பிரமணியின் ஆலயங்கள் அனைத்தும் விழா கோலம் அடையும் தினம் என்று மட்டுமே பலர் அறிந்து வைத்திருப்போம்.

    இந்நாளில்தான் தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளது என்று நமது புராணங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

    எனவேதான் பங்குனி மாதத்தில் நம் குடும்பங்களில் திருமண சடங்குகளை நாம் நடத்துவதில்லை.

    பங்குனி மாதத்திற்கு உண்டான தனிச்சிறப்பு நம்மை ஒன்று படவைப்பதாக அமைகின்றது.

    பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடி சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது.

    பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபட உகந்த நாளாக அமைகின்றது.

    இந்நாளில் நமது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வது நம் குலம் சிறக்க உதவுகின்றது.

    நாம் நம்குல தெய்வங்களை இந்த நாளில் சென்று வழிபாடு செய்தால் நமது மூதாதையரின் பரிபூரண ஆசிகள் நமக்கு கிடைக்கின்றது.

    ×