search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasekarapattinam Temple"

    • லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
    • பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழாவாகும். 12 நாட்கள் கோலாகலமாக நடந்தது.

    லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

    பக்தர்கள் காணிக்கைகளை கோவிலில் செலுத்துவதற்கு வசதியாக நிரந்தர உண்டியல் 13 உடன் கூடுதலாக 56 சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டது. 11-ம் திருநாள் அன்று ஏராளமான உண்டியல்கள் நிறைந்துவிட்டது. அதனால் அந்த உண்டியல்களை மூடி சீல் வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து உண்டியல் எண்ணும் பணி 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. மொத்தம் 69 உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்த பணியில் தூத்துக்குடி அறநிலையத்துறை துணை ஆணையர்கள் வெங்கடேஷ், ரத்தினவேல்பாண்டியன், உதவி ஆணையர்கள் கோமதி, கண்ணதாசன், சாத்தான்குளம் கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டது.

    ரொக்கமாக ரூ. 3 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 114, பொன் இனங்கள் 134 புள்ளியின் புதுக்காமு, வெள்ளி இனங்கள் 2416 கிராம் இருந்தது. 5 நாள் நடந்த உண்டியல் எண்ணும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பல்வேறு சமூகநல அமைப்புகள் மற்றும் கோவில் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×