என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » kumarapalayam accident
நீங்கள் தேடியது "Kumarapalayam accident"
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இன்று அதிகாலை காவிரி ஆற்றுக்குள் லாரி பாய்ந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #CauveryRiver
குமாரபாளையம்:
கோவையில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சென்னை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.
டிரைவர் மற்றும் கிளீனர் அதில் இருந்தனர். லாரி பவானியில் உள்ள லட்சுமி நகர் பைபாஸ் பிரிவு காவிரி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி பாலத்தின் மத்திய பகுதியில் உள்ள தடுப்பு சுவற்றை உடைத்து ஆற்றுக்குள் தலை குப்புற கவிழ்ந்தது.
பின்னால் வந்த ஒரு லாரி டிரைவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து குமாரபாளையம் மற்றும் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு இரு ஊர்களின் போலீசாரும் விரைந்தனர்.
ஆற்றுக்குள் மூழ்கி கிடக்கும் கண்டெய்னர் லாரியை மீட்டால்தான் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரம் தெரியவரும். நீர் மூழ்கிய லாரி பூந்தமல்லியை சேர்ந்தது. அதில் மகாலட்சுமி கார்கோ சர்வீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது. வண்டி எண். டி.என்.12, இசட்-3208.
ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப்பிறகு அந்த லாரி மீட்கப்பட்டது.
லாரியின் முன் பகுதியில் உடல் நசுங்கிய நிலையில் டிரைவர் உடல் மீட்கப்பட்டது. அவரது பெயர் சிவகுமார் (வயது 55) திருச்சி தேவர் புது தெரு பீமா நகரை சேர்ந்தவர்.
மேலும் ஆற்றில் விழுந்த லாரி சென்னையை சேர்ந்த பார்சல் நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தில் சிவகுமார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அந்த லாரியில் இருந்த கிளீனர் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரும் பலியாகிஇருக்கலாம் என்று தெரிகிறது. #CauveryRiver

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே இன்று அதிகாலை காவிரி ஆற்றுக்குள் லாரி பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் லாரியில் இருந்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #CauveryRiver
குமாரபாளையம்:
கோவையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று, நாமக்கல் மாவட்டம் வழியாக சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சித்தேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவிரி ஆற்று பாலத்தில் லாரி வந்தபோது, திடீரென 23-வது பக்கவாட்டு தூணை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பாலத்தின் கைப்பிடி சுவர் மட்டும் 40 அடி நீளத்திற்கு உடைந்தது.
காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் லாரி, ஆற்றுக்குள் பாய்ந்த வேகத்தில் அப்படியே நீருக்குள் முழுவதும் மூழ்கியது. அதன் பாகம் எதுவும் வெளியே தெரியவில்லை. இந்த பாலத்தின் ஒருபுற பகுதி ஈரோடு மாவட்ட எல்லைக்குள்ளும், மறுபுற பகுதி நாமக்கல் மாவட்ட எல்லைக்குள்ளும் அமைந்துள்ளது.
இதனால் தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பாலத்தில் ஏற்பட்டு உள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் ஆயுதப்படை போலீசார், சித்தோடு, பாவானி, குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக பாலத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே மற்றொரு பாலம் உள்ளது. சேலத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய இந்த பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
அதுபோல் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பவானி தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினரும் பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமாரபாளையம், பவானி, சித்தோடு, ஈரோடு, திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ரப்பர் படகை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதனிடையே லாரியின் டீசல் பாகம் உடைந்து குபு, குபுவென டீசல் வெளியேறி ஆற்று வெள்ளத்தில் பாய்ந்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் லாரியில் இருந்தவர்களின் கதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஆகவே, போலீசார், காவிரி கரையோரம் வசிக்கும் மீனவர்களின் உதவியை நாடினார்கள். மீனவர்கள் லாரி விழுந்த பகுதியில் மூழ்கினார்கள். ஆனால், ஆற்றில் நீரின் இழுப்பு விசை அதிகமாக இருந்ததால் அவர்களால் ஆற்றின் அடிப்பகுதி வரை செல்ல முடியவில்லை.
இதனை தொடர்ந்து ஈரோட்டில் இருந்து 2 பெரிய ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, அதன் உதவியுடன் லாரியை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் நீரில் மூழ்கி கிரேன் கம்பிகளை லாரியில் மாட்டினார்கள். பின்னர் லாரியை வெளியே தூக்கியபோது, ஒவ்வொரு பாகங்களாக உடைந்து வந்தது. இதனால் லாரியை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு ஒரு கிரேன் மூலம் லாரி பாதி அளவுக்கு நீரின் மேலே தூக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லாரியில் இருந்தவர்களின் கதி என்ன? என்று தெரியாததல் பரிசல்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. #CauveryRiver
கோவையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று, நாமக்கல் மாவட்டம் வழியாக சேலத்திற்கு வந்து கொண்டிருந்தது.
இன்று அதிகாலை 3.30 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சித்தேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவிரி ஆற்று பாலத்தில் லாரி வந்தபோது, திடீரென 23-வது பக்கவாட்டு தூணை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பாலத்தின் கைப்பிடி சுவர் மட்டும் 40 அடி நீளத்திற்கு உடைந்தது.
காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் லாரி, ஆற்றுக்குள் பாய்ந்த வேகத்தில் அப்படியே நீருக்குள் முழுவதும் மூழ்கியது. அதன் பாகம் எதுவும் வெளியே தெரியவில்லை. இந்த பாலத்தின் ஒருபுற பகுதி ஈரோடு மாவட்ட எல்லைக்குள்ளும், மறுபுற பகுதி நாமக்கல் மாவட்ட எல்லைக்குள்ளும் அமைந்துள்ளது.
இதனால் தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் சம்பவ இடத்திற்கு வந்து, பாலத்தில் ஏற்பட்டு உள்ள சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த பணியில் ஆயுதப்படை போலீசார், சித்தோடு, பாவானி, குமாரபாளையம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்டமாக பாலத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே மற்றொரு பாலம் உள்ளது. சேலத்தில் இருந்து கோவை செல்லக்கூடிய இந்த பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
அதுபோல் குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன், பவானி தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினரும் பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குமாரபாளையம், பவானி, சித்தோடு, ஈரோடு, திருச்செங்கோடு பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ரப்பர் படகை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதனிடையே லாரியின் டீசல் பாகம் உடைந்து குபு, குபுவென டீசல் வெளியேறி ஆற்று வெள்ளத்தில் பாய்ந்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் லாரியில் இருந்தவர்களின் கதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
ஆகவே, போலீசார், காவிரி கரையோரம் வசிக்கும் மீனவர்களின் உதவியை நாடினார்கள். மீனவர்கள் லாரி விழுந்த பகுதியில் மூழ்கினார்கள். ஆனால், ஆற்றில் நீரின் இழுப்பு விசை அதிகமாக இருந்ததால் அவர்களால் ஆற்றின் அடிப்பகுதி வரை செல்ல முடியவில்லை.
நீரில் மூழ்கிய அவர்கள் எந்த ஊரு லாரி? என்பது குறித்தும், வண்டி எண்? குறித்தும் அடையாளம் கண்டனர். இந்த லாரி பூந்தமல்லியை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மகாலட்சுமி கார்கோ சர்வீஸ் என்று எழுதப்பட்டு இருந்தது. வண்டி எண். டி.என்.12, இசட்-3208 என்பது தெரியவந்தது.
இதனிடையே லாரியில் இருந்தவர்களின் கதி என்ன? என்று தெரியாததல் பரிசல்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. #CauveryRiver
×

X