search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumari MP"

    • உலக சாதனை முயற்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற கண்ணனுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டு.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உலக சாதனை செய்யும் வகையில் லாரி ஒன்றை கயிறு மூலம் இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். இதை கன்னியாகுமரி எம்.பி.விஜய்வசந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாதனை செய்த கண்ணனுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை அவர் வழங்கி பாராட்டினார். 


    இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள விஜய்வசந்த் எம்.பி., தனது உடல் மற்றும் தசை பலத்தால் பல சாதனைகளை புரிந்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், இன்று 13.5 டன் எடை கொண்ட லாரியை 4 நிமிடங்களில் தனது கரங்களால் 111 மீட்டர் இழுத்து சென்று சாதனை செய்துள்ளார். அவரால் தமிழகத்திற்க்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.

    • நாகர்கோவில் அருகே டீக் கடையில் கேஸ்சிலிண்டர் வெடித்தது.
    • காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவம் கொண்ட மெத்தைகளை வழங்கினார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் டீக்கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது கியாஸ் சிலிண்டர் விபத்து குறித்து அறிந்த குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

    தீக்காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவம் கொண்ட மெத்தைகளை அவர் வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், மருத்துவ அதிகாரி ரினிமோள், மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

    • காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • குமரி மாவட்டத்தில் கர்மவீரர் உருவ சிலை, திருஉருவ படங்களுக்கு மரியாதை.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


    இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டன. 


    இதில் கலந்து கொண்ட குமரி எம்.பி. விஜய் வசந்த், கர்மவீரர் உருவ சிலை மற்றும் அவரது திருஉருவ படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    ×