என் மலர்
நீங்கள் தேடியது "laborer"
- களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவர்.
- வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வள்ளிக்கண்ணு (வயது65).இவரது மகன் பூல்பாண்டி. டிரைவராக உள்ளார்.
பூல்பாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கும், அவரது மனைவி செல்வ அரசிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் செல்வ அரசி கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று வள்ளிக்கண்ணு கணேசன் என்பவருடன் பைக்கில் களக்காடு வந்து கொண்டிருந்தார். ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே வந்த போது அங்கு பூல்பாண்டி நின்று கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த வள்ளிக்கண்ணு, பூல்பாண்டியிடம் சென்று வேலைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்? எனக் கேட்டுள்ளார். அதற்கு பூல்பாண்டி மது அருந்த பணம் தருமாறு கேட்டுள்ளார். வள்ளிக்கண்ணு பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த பூல்பாண்டி அவரை அவதூறாக பேசி தாக்கினார்.
மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பூல்பாண்டியை தேடி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை, நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன்
தங்கதுரை (வயது46). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (41). கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கதுரை, வீட்டில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை,
நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
- இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அருகே உள்ள விளாமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் (40). இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருசப்பன் விவசாய கூலி வேலைகள் செய்து வந்தார்.
அதிக வயிற்று வலிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பப்பாளி பறிக்கும் வேலைக்காக உடுமலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு செல்ல அந்தியூர் வந்துள்ளார். இரவு மதுபோதையில் அந்தியூர் பஸ் நிலையத்திலேயே இருசப்பன் படுத்து தூங்கியுள்ளார்.
இந்த நிலையில் காலையில் பஸ் நிலையத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வந்து இருசப்பனை ஆம்புலன்ஸ் மூலமாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் இருசப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி குடி போதையில் தகராறு செய்தார்.
- இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த மாதையன் மனைவி கோகிலா (வயது 33). இவர் வேலைக்கு சென்றுவிட்டு தாரமங்க லத்தில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அதே பேருந்தில் வந்த மேட்டு மாறனுர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (22) குடி போதையில் கோகி லாவிடம் தகராறு செய்தார். இதனால் பேருந்து நடத்து னர் சுரேசை மேட்டுமாரனுர் பகுதியில் கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். இத னால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அடுத்த நாள் கோகி லாவிடம் சென்று தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.
- கருப்பசாமி நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார்.
- அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி உமையம்மாள்புரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 25). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் திரேஸ்புரம் பகுதியில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் கருப்பசாமியை அடித்து தாக்கினர். பின்னர் அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது சராமரியாக வீசி தாக்கினர்
பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஜித்குமார் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார்.
- போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லுகுத்தி பாறையை சேர்ந்தவர் பிரபு. இவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இதையொட்டி பிரபு மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித் ெதாழிலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீஸ்காரர் பிரபு சண்டையை தடுக்க சென்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் அவர் போலீஸ்காரர் பிரபுவின் ஆள்காட்டி விரலை கடித்தார்.
காயம் அடைந்த போலீஸ்காரரை மற்ற போலீசார் மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீஸ்காரர் பிரபு அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பூவிழிராஜா புகைபிடித்துள்ளாா்.
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவிழிராஜாவை கைது செய்தனா்.
பல்லடம் :
தேனி மாவட்டம், அண்ணாமலை நகரைச் சோ்ந்தவா் மதிசெல்வம் (60). கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் பூவிழிராஜா (34). இவா்கள் இருவரும் கேத்தனூா் அருகே உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா்.கடந்த 2021ம் ஆண்டு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பூவிழிராஜா புகைபிடித்து ள்ளாா். இதனைப் பாா்த்த மதிசெல்வம், இங்கு புகைபிடிக்கக்கூடாது, வெளியில் செல் என்று கூறியுள்ளாா். இதில் ஆத்திரமடைந்த பூவிழிராஜா அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மதிசெல்வத்தை தாக்கியுள்ளாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூவிழிராஜாவை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை பல்லடம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் பூவிழி ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி தீா்ப்பளித்தாா். இதனைத் தொடா்ந்து பூவிழிராஜாவை கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனா்.
- ஆண்களுக்கு இணையாக பெண்கள் உழைக்கின்றனர்.
- கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை
உலகம் இயங்குவதற்கு தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. காட்டை வயலாக்கி நாட்டை வளமாக்கி வருபவர்கள் தொழிலாளர்கள். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க தொழிலாளர்கள் படாதபாடு படுகிறார்கள்.
கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை யில் நகரங்களில் பல்வேறு பணிகளை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற தொழில் நகரங்கள் முன்னேற்றத்திற்கு தொழி லாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலில் சாதனை படைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் தொழிலாளர்கள். மதுரை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது ஒருவரின் வருமானம் போதாது என்பதால் பெண்களும் கட்டாயமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளையும் பெண்கள் செய்து வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலை மற்றும் சிறு சிறு வியாபாரங்களில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல குடும்பங்களில் ஆண்கள் மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் பெண்கள் வீதிக்கு வந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தற்போது ராணுவத்தில் கூட பெண்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு தொழிலா ளர்களும் தங்கள் குடும்ப நலனுக்காக பல்வேறு துன்பங்களை தாங்கிக் கொண்டு தினம் தினம் உழைத்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளும் நம்பிக்கையுடன் சுயதொழில் செய்து வருகின்றனர். பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருமானம் பெறுகின்றனர்.
தொழிலாளர்களை நினைவு கூற வைக்கும் இந்த மே தின நாளில் அனைவரும் உழைத்து உயர உறுதிமொழி ஏற்போம்.
- விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள அருகம்பாளைத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 27). கூலித் தொழிலாளி.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.
கடந்த 14-ந் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் கரவழிமாதப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.
இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அவரது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது என கூறினார். இதனை அவர்கள் உண்மை என நம்பினர்.
பின்னர் பாலசுப்பிரமணியம் சிறுமியை தனது வீட்டில் வைத்து 5 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே பாலசுப்பிரமணியம் சிறுமியை திருமணம் செய்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சூலூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து 5 நாட்களாக சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 5 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணிகண்டன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
- பிரேத பரிசோதனைக்காக மணிகண்டன் உடலை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது42). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி பார்த்தபோது கதிர்வேல்நகர் பகுதியில் அவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சிப்காட் போலீசார் அங்கு விரைந்து சென்று மர்மமான முறையில் இறந்துகிடந்த மணிகண்டன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
- சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
சேந்தமங்கலம் அருகே பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவ குமார் (வயது 46) என்பவரும் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை இழுத்தார். அப்போது அவர் எதிர்பாரா தவிதமாக தேரில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சிய டைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக சிவகுமாரை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிவகுமா ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாப மாக இறந்தார். இது குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பலியான சிவகுமாருக்கு சுதா (42) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.
- முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லை.
சென்னை:
ஒடிசா ரெயில் விபத்து பற்றி அறிந்ததும் தமிழக பா.ஜனதா சார்பில் ரெயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன், ஏ.என்.எஸ். பிரசாத், ஜெயக்குமார் ஆகிய மூவர் குழுவை மாநில தலைவர் அண்ணாமலை அனுப்பி வைத்தார். பாலசோரில் முகாமிட்டுள்ள இந்த குழுவினர் கூறியதாவது:-
பாலசோரில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டோம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உதவ கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பரசோரா பகுதியை சேர்ந்தவர் குராபா (24). இவருக்கு திருமணமாகி ஒரு கை குழந்தையும் உள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது.
அவரிடம் போனில் பேசி ஆறுதல் கூறிய மாநில தலைவர் அண்ணாமலை குணமாகி சென்னைக்கு திரும்பி வரும்படியும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித் தார்.
பலியானவர்களின் உடல் களில் பெரும்பகுதி வடக்கு ஒடிசா சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
தேடி வரும் உறவினர்களுக்கு 'ஸ்லைடு' மூலம் அடையாளம் காட்டப்படுகிறது. அடையாளம் தெரிந்தவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டியில்தான் அதிக பலி ஏற்பட்டுள்ளது. அதில் தமிழர்கள் பெரும்பாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் குவித்து வைக்கப்பட்டுள்ள பைகளில் தமிழர்கள் பற்றிய அடையாளங்கள் இருக்கிறதா என்பதை ரெயில்வே மற்றும் காவல்துறை உதவியுடன் பார்த்து வருகிறோம். அனைத்து உடல்களும் அடையாளம் கண்டுபிடிக்கப்படும் வரை இங்கேயே தங்கி இருந்து தேவையான உதவிகள் செய்யும்படி மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.