search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Ammal Memorial Cup"

    • போட்டியானது செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது.
    • 6:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

    கோவில்பட்டி:

    கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை யின் சார்பில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.

    தொடக்கவிழா

    தொடர்ந்து வருகிற 28-ந்தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல்- இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. போட்டிகளை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் தலைமையில் மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ். சண்முகவேல் வரவேற்று பேசினார். இதில் கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி. சங்கரநாராயணன், நிர்வாகக்குழு உறுப்பினர் ராமசாமி, நேஷனல் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. காளிதாஸ முருகவேல், கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ். மதிவண்ணன் மற்றும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எ. ராஜேஸ்வரன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வக்கீல் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    டெல்லிஅணி வெற்றி

    நேற்று நடைபெற்ற போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின. இதில் 3:1 என்ற கோல் கணக்கில் புதுடெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றிப் பெற்றது.

    2-வது லீக் ஆட்டத்தில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியுடன், பெங்களூர் ெரயில் வீல் பேக்டரி அணி மோதின. இதில் புதுடெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணி வெற்றிப் பெற்றது. மேலும் 3-வது லீக் ஆட்டத்தில் ஹூப்பள்ளி சவுத்வெஸ்டர்ன் ரெயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி மோதின. இதில் 6:2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது.

    இன்னறய போட்டிகள்

    போட்டிக்கான ஏற்பாடு களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் ரகு, ராம்குமார் மற்றும் சிவராஜ் மற்றும் ஆக்கி பயிற்சி யாளர்கள் செய்திருந்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் போட்டிகளில் முதல் லீக்கில் சவுத் சென்ட்ரல் ரெயில்வே, செகந்திராபாத் மற்றும் கனரா பேங்க், பெங்களூரு அணிகளும், 2-வது லீக்கில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு போலீஸ், சென்னை அணிகளும், 3-வது லீக்கில் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா, புதுடெல்லி மற்றும் சவுத் வெஸ்டர்ன் ெரயில்வே, ஹூப்பள்ளி அணிகளும் மோத உள்ளன.

    ×