search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "land acquired"

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு பொதுமக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #chennaisalemgreenway

    கோவில்பட்டி:

    தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தென்மண்டல விவசாயிகள் மாநாடு கோவில்பட்டி மந்தித்தோப்பில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமை வகித்தார். இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

    மாநாட்டில் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதல் லாபம் பெற வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின்படி இத்திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், விவசாயிகளின் நகைக்கடன் உள்பட அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சத்துணவு திட்டத்திற்கு முட்டை வழங்கிய நிறுவனத்தில் சோதனை தான் நடைபெற்றுள்ளது. குற்றம் நிருபிக்கப்பட்டதாக அர்த்தமில்லை, இந்த பிரச்சினையின் காரணமாக தற்போது நடைபெற்ற டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை, என்ன நடைமுறை பின்பற்றபடுமோ, அது பின்னபற்றபடுவதாக அந்த துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு 90 சதவீத மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிலம் எடுப்பு முறையாக நடைபெற்றுள்ளது. மக்களின் கருத்தினை கேட்டு, அவர்களின் ஒப்புதலை பெற்றுதான் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க.வும் இந்த சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, நிலஎடுப்பு முறையாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அது முறையாக எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemgreenway

    ×