search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lawyers protest"

    • வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
    • ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வக்கீலுமான ஆம்ஸ்ட்ராங்க், ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டவர்களையும், உண்மைக் குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது வக்கீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புகை படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், வக்கீல்கள் சங்கரசுப்பு, சத்தியச்சந்திரன், ரஜினிகாந்த், ரமேஷ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துக் கொண்டனர்.

    • ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
    • போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.

    சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    • புதிய சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை.
    • 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்.

    சென்னை:

    இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் மத்திய அரசு நிறைவேற்றி, கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டிலும் வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க., வக்கீல்கள் இன்று காலையில் இந்த 3 புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க., ராஜ்ய சபா எம்.பி.யும் மூத்த வக்கீலுமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க. வக்கீல்கள் கலந்துக் கொண்டனர். அப்போது, இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று வக்கீல்கள் கோஷம் போட்டனர்.

    அப்போது என்.ஆர்.இளங்கோ கூறுகையில், "பாராளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் இல்லாமல், இந்த 3 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    இந்த சட்டங்கள் நடைமுறைக்கு கடினமானவை. நீதி பரிபாலனத்திற்கு இந்த சட்டம் மிகவும் எதிரான வையாக உள்ளது. எனவே, இந்த சட்டங்களை அரசு திரும்ப பெறவேண்டும். இதை வலியுறுத்தி நாளை (சனிக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தி.மு.க. சட்டத்துறை சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்று கூறினார்.

    இந்த நிலையில், இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பின்னர், இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    பின்னர், இதுகுறித்து ஜி.மோகன கிருஷ்ணன் கூறும்போது, `3 சட்டங்களும் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதனால், இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.

    • உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
    • போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருத மொழியிலும் இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் பாண்டிச்சேரி மற்றும் தமிழக வக்கீல்கள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இன்று கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு திருப்பூர் வக்கீல் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மூத்த வக்கீல்கள் கே. என் .சுப்பிரமணியம், பாப்பா மோகன் ,பூபேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

    அப்போது மத்திய அரசு மறைமுகமாக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தில் மூத்த வக்கீல்கள், பெண் வக்கீல்கள், இளம் வக்கீல்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு கொரோனா காலகட்டத்தில் திரும்ப பெறப்பட்டது.
    • கொலையாளிகள் நரேஷ் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி துவாரகா பகுதியில் வழக்கறிஞர் வீரேந்தர் குமார் நர்வால் நேற்று பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் நரேஷ் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    36 வருட பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும், பிரதீப்புக்கும் வழக்கறிஞர் வீரேந்தர் குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் வீரேந்தர் குமாரின் தாத்தா, பிரதீப்பின் மாமாவை 1987ல் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரதீப்பிற்கு கிடைக்கவேண்டிய இழப்பீடுகளில் வீரேந்தர் குமார் சில சட்ட தடங்கல்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு பிரதீப் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே விரோதம் மேலும் வளர்ந்துள்ளது.

    2017ம் ஆண்டு வழக்கறிஞர் வீரேந்தர் குமாரை பிரதீப் கொல்ல முயன்றுள்ளார். ஆனால் அப்போதைய தாக்குதலில் வழக்கறிஞர் உயிர்தப்பினார். அவரது டிரைவர் காயமடைந்தார். அதன்பின்னர் வழக்கறிஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

    பட்டப்பகலில் அவர் கொல்லப்பட்டதால் சக வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கறிஞர் கொலைக்கு நீதி கேட்டு, நாளை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் விசாரணைகளுக்கு ஆஜராகாமல் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்த டெல்லி பார் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. வழக்கறிஞர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் வடக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

    • பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    சென்னை பெருங்குடி ராஜீவ் நகரை சேர்ந்த ஜெய்கணேஷ் சைதாப்பேட்டை கோர்ட் டில் வழக்கறிஞராக பணி யாற்றி வந்தார்.

    அவர் கடந்த 25-ந் தேதி இரவு தனது வீட்ட ருகே நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக் களில் வந்த மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப் பியது. இது பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்திற்கு கண்ட னம் தெரிவித்து அரக்கோ ணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் அரக் கோணம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லோகபிரா மன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

    வழக்கறி ஞர்களுக்கு பாதுகாப்பு சட் டத்தை மத்திய, மாநில அரசு கள் விரைவாக இயற்றக்கோரி கோஷமிட்டனர். இதில் 80-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி:

    ஆந்திர மாநிலம் சட்டக் கல்லூரியில் பயிலும் தமிழக மாணவர்கள் திருப்பதி அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அவர்களை கைது செய்ய கோரியும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பொன்னேரி சார்பு நீதிமன்றம் அருகில் வழக்கறிஞர் லெனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.
    • இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும்.

    கோவை:

    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ஜோதிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாசேதுங், செயலாளர் கோபால் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டம் குறித்து வக்கீல்கள் கூறியதாவது:-

    ஆபத்தான சூழலில் இருந்து இந்திய நாட்டை பாதுகாக்கும் உச்சபட்ச கடமையை ஆற்றுவோர் ராணுவ வீரர்களே. அந்த பணியிலும் கூட 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கூலி ஆட்களை எடுக்க துணிந்து இருக்கிறது மத்திய அரசு. இது மிகப்பெரிய மோசடி ஆகும்.

    ஓய்வூதியம், பணி பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுத்து நிரந்தரமற்ற சூழலில் 4 ஆண்டுகளுக்குப்பின் கைவிடப்படும் வீரர்களின் நிலைமை என்ன ஆகும். ராணுவ வீரர்களுக்கு இதுதான் நிலை என்றால் மற்ற பல துறைகளிலும் இதைவிட மோசமான நிலை ஏற்படுத்தப்படும்.

    இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பது மகத்தான தேசபக்த கடமை. இளம் வயதினரை ஆர். எஸ். எஸ்.சின் ஊழியர்களாக மாற்றி ராணுவ ஆட்சியை நிறுவ முயற்சிக்கும் திட்டமாகும். இந்தியா முழுவதும் தங்களது வாழ்வியல் உரிமைக்காக போராடும் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களை புல்டோசர் கொண்டு அரசியலமைப்பு சட்ட மாண்புகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புல்டோசர் பாசிசத்தை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    ×