search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leadership"

    • இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் அவரது ஆலோசனையின் பேரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி இளைஞர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். பயிற்சி முகாமில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் பாண்டியராஜன், வக்கீல் சீனிவாசன், சிவகுருநாதன், செந்தலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

    • தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

    • மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளருமாகிய செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
    • புதியதாக சேர்ந்தவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மலர் கொத்துக் கொடுத்தும், சால்வை அறிவித்தும் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் தனியார் மஹாலில் மரக்காணம் மேற்கு ஒன்றியம் கீழ் எடையாளம் ஊராட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகி சிவரஞ்சனி பாலகிருஷ்ணன் தலைமையில் சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க மாவட்ட செயலாளருமாகிய செஞ்சி மஸ்தான் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்பொழுது கட்சியில் புதியதாக சேர்ந்தவர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மலர் கொத்துக் கொடுத்தும், சால்வை அறிவித்தும் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர்.

    இதனைத்தொடர்ந்து கட்சியில் புதியதாக சேர்ந்த அனைவருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தி.மு.க கட்சியின் துண்டு அணிவித்து அவர்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், மறுக்காணம் ஒன்றியக் குழு துணைப் பெருந் தலைவருமாகிய பழனி ,ஒன்றிய அவைத்தலைவர் குமார். ஒன்றிய துணை செயலாளர்கள் சரவணன், மீனாகுமாரி, மாவட்ட பிரதிநிதிகள் தேவதாஸ், ராமமூர்த்தி, மாவட்ட நிர்வாகி திருமலை உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்,

    • ராஜபாளையத்தில் ம.தி.மு.க. கூட்டம் நடந்தது.
    • அவை தலைவர் சேது.இன்பமணி தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.அவை தலைவர் சேது.இன்பமணி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் லிங்கம், அக்பர்அலி, பூபதி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மதியழகன் வரவேற்றார். விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ரகுராமன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் தமிழ்மணி, துணை பொது செயலாளர் காதர்மைதீன், பொதுக்குழு உறுப்பினர் ஞானகுரு, தலைமைக் கழக சொற்பொழிவாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன் ஆகியோரும் பேசினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், சேத்துர் அய்யனப்பன், இளைஞரணி அமைப்பாளர் அழகர்சாமி, முருகானந்தம், மாணவரணி அமைப்பாளர் ஜெயக்குமார், முகம்மது இத்ரிஸ், தொண்டரணி தர்மலிங்கம், கண்ணன், வேலுசாமி, கருத்தப்பாண்டி, மகளிரணி முனீசுவரி, மீனா, ரதிபிரியா இசக்கியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் நிஜாமுதீன் நன்றி கூறினார்.

    • ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
    • மக்களின் கோரிக்கைகள் குறித்த போராட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து முக்கிய தீர்மானம்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் விளக்க பேரவை கூட்டம் ஓன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி இன்றைய அரசியல் பற்றி விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் கேவி.ராஜேந்திரன் ஆகியோர் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் நகர மக்களின் கோரிக்கைகள் குறித்து போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்வது குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வீரசேகரன், முத்துகிருஷ்ணன், வீரமணி, பெரியசாமி, ராஜேந்திரன், கவிதா, நகர குழு உறுப்பினர்கள் ரமேஷ், மந்திரமூர்த்தி, இந்திராணி, சரவணன், கவிதா உட்பட ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்.
    • முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன் வரவேற்றுப் பேசினார். தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக தலைமை பேச்சாளர்கள் போடி காமராஜ், பேர்ணாம்பட்டு ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, முன்னாள் எம்பி பரசுராமன், மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் இறை கார்குழலி, மாவட்ட நிர்வாகிகள் இறைவன் , அண்ணா, மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, செல்வராஜ், உலகநாதன், முரசொலி, செல்வகுமார், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், நீலகண்டன், சதாசிவம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், தஞ்சை மாநகர நிர்வாகிகள் உஷா, காளையார் சரவணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வரகூர் காமராஜ், செந்தமிழ் செல்வன், கமலா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பகுதி செயலாளர் சந்திரசேகர மேத்தா நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்து 31-வது மாவட்டமாக மயிலாடுதுறைக்கு வருகைதந்துள்ளேன்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க இடைகால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்திடவேண்டும் என அவை தலைவரும், முன்னாள் தமிழ்நாடு வக்புவாரிய தலைவருமான தமிழ்மகன்உசேன் ஆன்மிக பயனமாக சிறப்பு பிரதாத்தனை செய்து வழிபட்டார்.

    அதில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைதலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏகே.சந்திரசேகரன், ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், கே.எம்.நற்குணன், சிவக்குமார், நகரசெயலாளர் வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

    பின்னர் தமிழ்மகன்உசேன் பேசுகையில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிராத்தனை செய்து வருகிறேன். 31வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகைதந்துள்ளேன்.

    எம்ஜிஆர்.ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தபோகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை ஆயப்படுத்திக்கொண்டு வழிநடத்தினார்.

    இதுதொடரவேண்டும் என்றார்.

    • கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் அதிமுக சார்பில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார்.

    திட்டச்சேரி பேரூர் செயலாளர் அப்துல் பாசித், மாவட்ட துணை செயலாளர் அபுசாலி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

    நாகை நகர செயலாளர் தங்க கதிரவன் வரவேற்றார்.

    நாகை மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ஓ.எஸ்.மணியன்.எம்எல்ஏ, மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட அவை தலைவர் ஜீவானந்தம், தலைமை கழக பேச்சாளர்கள் அன்பழகன், நல்லுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முடிவில் திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    • முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்தது.
    • 7-ந் தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.இதன்கீழ் பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகியவை குறித்து ஆண்டுதோறும் உறைவிட பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமை பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன்கீழ் வருகிற 7-ந்தேதி முதல் 28ந் தேதி வரை,12 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

    • கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும்.
    • வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்துக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், துணை ஒருங்கிணை–ப்பாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் கட்டிக் காத்த இயக்கத்தை சுயநலத்திற்காக ஒருவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

    எடப்பாடி பழனிச்சாமி செய்த சூழ்ச்சிகள், வஞ்சகத்தை வெளிப்படுத்தாமல் அ.தி.மு.க.வை வலுவான இயக்கமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விடுத்த அறிக்கையை மக்களும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

    எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு வாரத்தில் எங்களை நோக்கி வந்து விடுவார்கள். ஒற்றை தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கூட்டு தலைமையாக இருந்தால்தான் இயக்கம் வலுவாக இருக்க முடியும். அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திருடி சென்றதாக கூறும் பட்டியலை அவர்களால் கூற முடியுமா?

    மேல்முறையீட்டுக்கு சென்று இருக்கிறார் ஈ.பி.எஸ். அதை நாங்கள் சந்திப்போம். கட்சிக்காக உழைத்தவர்கள் என அனைவரும் ஒன்றாக, வலுவான இயக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி தினகரன், சசிகலாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

    ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வராமல் போனால் போகட்டும். தொண்டர்கள் தற்போது

    ஓ.பன்னீர்செல்வத்தை தேடி வருகிறார்கள். மற்ற கட்சிகளை அ.தி.மு.க விவகாரத்தில் இணைத்து பேசாதீர்கள். இது உள்கட்சி பிரச்சனை.

    மற்ற கட்சிகள் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கெங்கவல்லி அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி தலைமை ஆசிரியர்கள் பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் அரசுப்–பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டார வள மையம் சார்பில் கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்திப் பேரணி நடைபெற்றது. பேரணி கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளி அருகே தொடங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியே சென்று, வட்டாரக் கல்வி அலுவலகத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன், வட்டார மேற்பார்வையாளர் ராணி, ஆசிரியப் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், அன்பரசு மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 62 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர் . பேரணியில் அரசுப்–பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்டார சிறப்பாசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    கடந்த 15 வருடங்களில், மாணவர் தீவிர சேர்க்கையை வலியுறுத்தி நடந்த பேரணிகளில், மாணவர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில், தற்போது முதன் முறையாக , தலைமை ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்றதை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • அ.தி.மு.க.வில் கடைசி தொண்டனுக்கும் கட்சி முதலிடம் கொடுக்கும் என்று எடப்பாடியார் மூலம் மக்கள் தெரிந்து கொண்டனர்.
    • ஒற்றை தலைமையே அ.தி.மு.க.வின் இனிவரும் காலங்களில் வெற்றி தலைமையாக அமையும்.

    பணகுடி:

    நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த தீய சக்தியாலும் அழிக்க, அசைக்க முடியாது. கடந்த 4 வருட ஆட்சியே இதற்கு சாட்சி. எடப்பாடியார் ஏழை, எளிய மக்களின் இதயத்தில் வாழ்ந்து வருபவர். அ.தி.மு.க.வில் கடைசி தொண்டனுக்கும் கட்சி முதலிடம் கொடுக்கும் என்று எடப்பாடியார் மூலம் மக்கள் தெரிந்து கொண்டனர்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிப்படி அ.தி.மு.க.வை எடப்பாடியார் வழி நடத்தி வருகிறார். ஒரு கொடியில் தான் இரட்டை இலை மலர்கிறது. அதேபோல என்றும் தமிழகத்தில் எடப்பாடிதான் இரட்டை இலையை வெற்றி இலையாக வழிநடத்தி செல்ல அவர் ஒருவரே ஆவார். ஆகவே ஒற்றை தலைமையே அ.தி.மு.க.வின் இனிவரும் காலங்களில் வெற்றி தலைமையாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×