search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lephants"

    • கடையில் பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது.
    • யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனைமலை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லமுடி- பூஞ்சோலை எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த தேயிலை தோட்ட நிர்வாகத்தின் கீழ் அங்கு ஒரு டீக்கடையும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ராஜா வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் நேற்று இரவு வனத்தை விட்டு வெளியில் வந்த 7 காட்டு யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.

    வெகுநேரமாக அங்கேயே சுற்றிதிரிந்த யானை கூட்டம், அங்குள்ள ராஜாவின் டீக்கடை அருகே சென்று கடையை உடைத்து உள்ளே புகுந்தது.பின்னர் அங்குள்ள பொருட்களை தின்றும், தூக்கி எறிந்தும் சேதப்படுத்தியது. பின்னர் யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டன.இன்று காலை ராஜா கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியானார்.

    அப்போது யானை கடையை உடைத்து பொருட்களை சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதம் அடைந்த கடையை பார்வையிட்டனர்.

    மேலும் சம்பவம் குறித்து அங்கிருந்த மக்களிடமு ம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மக்கள் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வெளியில் நடமாட அச்சமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் யானைகள் மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×