search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Library Committee"

    • நூலக வரி நிலுவைத் தொகை ரூ.70 லட்சத்தை நூலகக் குழுத்தலைவர், பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லியிடம் வழங்கினார்.
    • நூலகங்களை ஆய்வு செய்து போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் குழுவினர் உரையாடினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் தலைமையில், கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டசபை செயலாளர் சீனிவாசன், நூலகக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் கணபதி, தியாகராஜன், ஸ்டாலின் குமார், சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் நூலகக் குழு ஆய்வு கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்தில் நூலக வரி நிலுவைத் தொகை ரூ.70 லட்சத்தை நூலகக் குழுத்தலைவர், பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லியிடம் வழங்கினார். முன்னதாக தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையம், தென்காசி மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள வ.உ.சி. வட்டார நூலகம், திப்பணம்பட்டி கிளை நூலகம், செங்கோட்டை முழு நேர கிளை நூலகம் ஆகிய நூலகங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் உரையாடினர். மாணவர்கள் போட்டித் தேர்வு பயில்வதற்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் மற்றும் என்.சி.ஆர்.டி. நூல்கள் தேவை என தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் நூலகங்களுக்கு 12 செட் நூல்கள் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ, முதன்மை கல்வி அலுவலர் முத்தையா,

    மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செல்வி, உதயகுமார், நூலகர் பிரமநாயகம், சுந்தர் ராமசாமி, முருகன், உள்ளாட்சி நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நூலகக்குழு தலைவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    ×