search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "license is mandatory"

    • தனியார் நர்சரிகள் அமைத்து பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் கொள்முதல் செய்தும், உற்பத்தி செய்தும் விற்பனை செய்யப்படுகிறது.
    • இவ்வாறு விற்பதற்கு விதைச் சட்டத்தின் படி லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகும்.

    நாமக்கல்:

    சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக தனியார் நர்சரிகள் அமைத்து பழக்கன்றுகள், தென்னங்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் கொள்முதல் செய்தும், உற்பத்தி செய்தும் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு விற்பதற்கு விதைச் சட்டத்தின் படி லைசென்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகும். லைசென்ஸ் பெறாமல் விற்பனை செய்பவர்கள் மீது விதைகள் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதிய லைசென்ஸ் வேண்டி விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 4-வது தளத்தில் அறை எண் 402-ல் இயங்கும், விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து, கட்டணம் ரூ.1,000 செலுத்தி லைசென்ஸ் பெறலாம்.

    பழம், காய்கறி நாற்றுகள், தென்னங்கன்றுகள் இருப்பு பதிவேட்டில் பயிர் மற்றும் ரகம் வாரியாக இருப்பு வைத்து பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். விற்கப்படும் நாற்றுகளுக்கு விற்பனை ரசீது, வாங்குபவர்கள் கையொப்பம் பெற்று வழங்கப்பட வேண்டும்.

    இருப்பு மற்றும் விலைப் பலகை பராமரிக்க வேண்டும், லைசென்ஸ் இல்லாமல், நர்சரி அமைத்துள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். லைசென்ஸ் பெறாமல் விற்பனை செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநர் செல்வ மணி தெரிவித்துள்ளார்.

    ×