search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Life guidance program for"

    • மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தலின்படி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம் இணைந்து நடத்திய பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக மக்கள்குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்தும், போட்டித்தேர்வுகள் குறித்தும், அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும், தன்னார்வ பயிலும் வட்டங்கள் குறித்தும், முப்படைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், தொழிற்கல்வி குறித்தும் மற்றும் வங்கி கடனுதவி திட்டங்கள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் வாழ்க்கை வழி காட்டி நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராதிகா, மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×