search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor bottles Destruction"

    • சாராய வழக்குகளில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பொதுத்தேர்தலின்போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதியில் வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப்பாட்டில்கள் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பதி மாவட்டத்துக்கு பல்வேறு வாகனங்களில் கடத்தி வரபட்டு பறிமுதல் செய்து, அது சம்பந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    சாராய வழக்குகள் மீதான வழக்கு விசாரணை முடிந்ததும், திருப்பதி பாலாஜி காலனி போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள சாலையில் மதுபானப் பாட்டில்களை அடுக்கி வைத்து நேற்று ரோடு ரோலர் மூலம் அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பராயுடு பங்ககேற்று மதுபானப் பாட்டில்களை அழிக்கும் ரோடு ரோலரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரோடு ரோலர் மதுபானப் பாட்டில்கள் மீது ஏறி நசுக்கி அழித்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடராவ், குலசேகர், சாந்தி பத்ரதல், கலால் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பதி மாவட்டத்துக்கு யாரேனும் மதுபானங்களை கடத்தி வந்தாலோ அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்தாலோ அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்தலின்போது 300 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 27 ஆயிரத்து 568 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுதவிர மாவட்டத்தில் சாராய வழக்குகளில் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுசார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிந்ததும், மொத்தம் ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபானப் பாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×