search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor Deaths"

    • போலி மதுபானம் அருந்திய நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி பிரச்சனையை எழுப்பியது.

    பாட்னா:

    மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மதுவிற்பனை நடைபெறுகிறது. அத்துடன் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர், பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய நபர்களில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    போலி மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக சட்டசபையில் கடும் விவாதம் நடைபெற்றது. சரண் மாவட்டத்தில் 40 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி இந்த பிரச்சனையை எழுப்பியது. அப்போது எதிர்க்கட்சி மீது கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர் நிதிஷ் குமார், பிற மாநிலங்களில்கூட போலி மதுபானங்களால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×