என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "loan issue"
- கரீப் சாப் என்பவர் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை.
- கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரை சேர்ந்தவர் கரீப் சாப் (32). இவரது மனைவி சுமையா (30). இவர்களுக்கு ஹாஜிரா (14) என்ற மகளும், முகமது சுபான் (10), முகமது முனீப் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
கரீப்சாப் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் கரீப் சாப்பால் வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்தனர். பணத்தை செலுத்த முடியாத கரீப் சாப் தனது மனைவியிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். பின்னர் கணவன், மனைவி 2 பேரும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு கரீப்சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் உணவில் விஷம் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்தனர். உணவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் சாப்பிட்ட 3 குழந்தைகளும் படுக்க சென்றனர். பின்னர் தூக்கத்திலேயே அவர்கள் பலியானார்கள்.
இதையடுத்து கரீப்சாப் செல்போன் மூலம் ஒரு வீடியோ எடுத்தார். அதில் கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் விரக்தி அடைந்த நான் 3 குழந்தைகளை விஷம் வைத்து கொன்று விட்டு நானும், எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கடன் கேட்டு தொல்லை கொடுத்த சிலரது பெயர்களையும் தெரிவித்து இருந்தார். 5 நிமிட வீடியோவாக எடுத்து அதை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு இல்லாமல் 2 பக்கத்தில் உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.
பின்னர் கரீப் சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் வீட்டின் ஹாலில் முகத்தை துணியால் மூடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தெரிய வந்ததும் திலக்பார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரீப் சாப் வெளியிட்ட வீடியோ மற்றும் உருக்கமான கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் கடன் தொல்லைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தக்கலை:
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு, அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). கூலி தொழிலாளி.
செந்தில் குமாருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்திலும் பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் செந்தில்குமார் மது பழக்கத்திற்கும் அடிமையானார். இதற்கு மனைவி லதா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையேயும் பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று செந்தில்குமார் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு தங்கினார். நள்ளிரவில் அவர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடப்பதை கண்ட உறவினர்கள் இது பற்றி செந்தில்குமாரின் மனைவியிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து செந்தில் குமாரை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றி செந்தில் குமாரின் மனைவி தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அவர் மதுவில் விஷம் கலந்து கடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்