என் மலர்
நீங்கள் தேடியது "loan"
- கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
- இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.
கொழும்பு :
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.
இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.
அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.
இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.
இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
- கூட்டுறவுத்துறை மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது
- மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடனுதவி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி தலைமையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அறந்தாங்கி கிளையில் உள்ள காவேரி மகளிர் சுய உதவி குழுவிற்கு உயர்ந்தபட்சமாக ரூ.20 லட்சம் குழுக்கடன் வழங்கப்பட்டது. மேலும் தாட்கோ சுய உதவி குழு கடனாக தேக்காட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள 3 சுய உதவி குழுக்களுக்கு ரூ.19.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர்கள், வங்கியின் துணை பதிவாளர் முதன்மை வருவாய் அலுவலர், வங்கியின் பொது மேலாளர் மற்றும் வங்கியின் உதவி ெபாது மேலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கடன் தொல்லையால் ெரயில் முன் பாய்ந்து கட்டிட காண்டிராக்டர் தற்கொலை செய்தார்.
- 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது.
மதுரை
மதுரை மாடக்குளம் வி.கே.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(38) கட்டிட காண்ட்ராக்டர். இவருக்கு மாரி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் சம்பந்தமாக வாங்கிய கடனை தர முடியாத நிலையில் தவித்து வந்த இவர் பைக்காரா 7-வது ெரயில்வே பாலத்தில் ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதைதொடர்ந்து ரெயில் முன் பாய்ந்த அவரை ெரயில் மோதியதில் துண்டு, துண்டாக சிதறியது 200 மீட்டர் தூரத்திற்கு ெரயில் இழுத்து சென்றது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் ெரயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நடந்தது.
- மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார் கடன் கேட்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றார். இதில் பெரம்பலூர் தாலுகாவில் 16 விண்ணப்பங்களும், ஆலத்தூர், குன்னம் ஆகிய தாலுகாக்களில் தலா 12 விண்ணப்பங்களும், வேப்பந்தட்டை தாலுகாவில் 9 விண்ணப்பங்கள் என மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் பொருளாதார நிலையினை உயர்த்தும் விதமாக 46 கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, 221 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக உள்ள 2,392 பெண்களுக்கு ரூ.12.13 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் கடன் தொகையினை வழங்கி பேசும்போது,பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்,மகளிர்களின் குடும்ப பொருளாதார நிலையினை உயர்த்திடும் விதமாக 10.30 சதவீதம் குறைந்த வட்டியில் மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 182 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 2,215 உறுப்பினர்களுக்கு ரூ.19.16 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மகளிர் சுய உதவிக்குழுக்கடன் வழங்கப்பட்டது. அடுத்தபடியாக கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் விதமாக 34 நியாய விலை கடைகளுக்கு க்யூ ஆர் கோடு வழங்கக்கூடிய அந்த நிகழ்வும் அதே போல இரண்டு நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலேயே நமது மாவட்டத்தில் தான் 21 நியாய விலைக் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகின்றது. வரும் காலங்களில் அனைத்து கடைகளிலும் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், துணைப்பதிவாளர்கள் ஆறுமுகம், அபிராமி (பொதுவிநியோகத்திட்டம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நெசவாளர்கள் 60 பேருக்கு ரூ.30 லட்சம் கடன் வழங்கபட்டது
- விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்
கவுந்தப்பாடி,
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தலைவர், வாடிக்கை யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முத்ரா கடன் உதவி திட்டத்தின் மூலம் கவுந்த ப்பா டி நெசவாளர் கூட்டு றவு சங்க உறுப்பினர்கள், க.புதூர் காஞ்சிகோவில், செந்தாம் பாளையம் கலை வாணர், தர்மபுரி திருவள்ளு வர், கவுண்ட ம்பாளையம் காமராஜர் சங்கம் மற்றும் நல்லா கவுண்டன்பாளையம் நல்லி டெக்ஸ் ஆகிய நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 60 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.30 லட்சம் கடன் வழங்க ப்ப ட்டது. விழாவிற்கு ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ண ராஜ் தலைமை தாங்கினார்.
கவுந்தப்பாடி கிளை மேலாளர் வேலுமணி வர வேற்றார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உதவி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்க மணி, மாவட்ட கவுன்சிலர் சிவ காமி சரவணன், கவுந்த ப்பாடி நெசவாளர் கூட்டு றவு சங்க தலைவர் மாதே ஸ்வரன், ஓடத்துறை திரு வேங்கடம், அய்ய ம்பாளையம் ரவிச்சந்திரன், மணல் சோமு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேலாளர்கள், கவுந்தப்பாடி மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகள் கடன் மேற்பார்வையாளர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வங்கி மேற்பார் வையாளர் முருகேசன் நன்றி கூறினார்.
- எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்ப தற்காக அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் குறு தொழில்கள் செய்திட அதிக பட்சமாக ரூ. 2½ லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும் எனவும் இததற்காக ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் வயது, பொது பிரிவினருக்கு 18 முதல் 45-க்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது 18 முதல் 55-க்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சியோடு வேலை வாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்து 1-1-2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவராக இருத்தல் வேண்டும்.
உற்பத்தி துறையை பொருத்தமட்டில் அதிகப்பட்ச திட்டச் செலவு ரூ. 15 லட்சத்திற்குள்ளும், சேவை மற்றும் வணிகத்துறை பொறுத்தமட்டில் அதிகபட்ச திட்டச் செலவு ரூ. 5 லட்சத்திற்கு ள்ளும் இருத்தல் வேண்டும்.
தொழில் முனைவோரின் முதலீடு பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் இருத்தல் வேண்டும். அரசின் மானியத்தொகையாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அலுவலக நாட்களில் சந்தித்து விபரம் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்ய வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினராக இருந்து வரும் நிலையில் சங்கத்தை அந்த கவுன்சிலில் ஆயுட்கால உறுப்பினராக மாற்றுவது என்றும், அதற்காக சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்வது என்றும், பின்னலாடை தொழில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் மின்கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் மந்தநிலை காரணமாக வங்கிகள் கடன் பெற்றவர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தொழிலை காப்பாற்ற வங்கிகள் வழங்கிய கடனை குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் இ-இன்வாய்ஸ் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏ.எக்ஸ்.என். நிறுவனம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேபோல் சங்க உறுப்பினர்கள் தங்களது நிறுவனங்களுக்கு காப்பீடும் செய்யும்போது அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், காப்பீடு செய்யாவிட்டால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் விளக்கமளித்தனர்.
- அரியலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது
- சுய உதவிக் குழுக்கள் , பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் குறைந்த வட்டியில் கடன் பெற மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக் குழுக்கள், பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரியலூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக பயிர்கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டுக்க டன்(டாப்செட்கோ), சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கடன் (டாம்கோ )ஆதிதிராவிடர் நலக் கடன் (தாட்கோ), கைவினைக் கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, அவர்கள் தம் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்கள், இயந்திரங்கள் வாங்க (டாம்கோ), சுயஉதவிக்குழு கடன் போன்ற கடன்கள் தனிநபர் ஒருவருக்கு ரூ.10 லட்சம் வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி நபர் ஒருவருக்க வீட்டுக் கடன் மற்றும் வீட்டு அடமான கடன், சுய உதவிக்குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரையிலும், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.இந்த திட்டங்களில் கடன் கோரும் பயனாளிகள், தங்கள் ஆதார், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, ஜாதிச் சான்றிதழ், தொழில் வரி ரசீது மற்றும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களை பெறலாம்.மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அட்டை சமர்ப்பித்து கடன் பெறலாம். மேலும், கடன் பெறுவது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 9 கிளைகள் மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- கடனை திருப்பி கேட்ட கணவன்-மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
- எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார்.
விருதுநகர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரநல்லூரை சேர்ந்தவர் கவிதா(40). இவர் தர்மபுரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக வேலை பார்க்கிறார். இவரது கணவர் தினகரன். திருச்சுழி அருகே உள்ள தும்முசின்னம்பட்டியை சேர்ந்தவர் பூர்ணசந்திரன். இவரது தொழில் தேவைக்காக கவிதா ரூ.97 லட்சம் கடன் கொடுத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டில் பூர்ணசந்திரன் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் கவிதா கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் கவிதாவும், கணவரும் பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பூர்ணசந்திரன் மனைவி கீதா, தம்பி கோபால் மற்றும் சிலர் சேர்ந்து கவிதா, தினகரனை அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார். மேலும் கணவன்-மனைவி சிலருடன் சேர்ந்து தன்னையும் குடும்பத்தாரையும் தாக்கியதாக கீதா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய தலைவர் வழங்கினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் தொழில்முனைவோருக்கான பயிற்சி தொடங்கியது.
இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.70 ஆயிரம் வரை நுண்தொழில் நிறுவன நிதி கடன் திட்டம் மூலம் 10 பேருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் ராம்குமாா், மாவட்ட திட்ட செயல் அதிகாரி ரமேஷ் கிருஷ்ணன், செயல் அலுவலா்கள் தினேஷ்குமாா், ப்ரீத்தா மற்றும் தொழிற்சாா் வல்லுநா்கள், கோத்தகிரி வட்ட மகளிா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டாா்.
- கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.
- மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் சுய உதவி குழுக்கள், மாற்றத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 கோடி 32 லட்சம் கடன் வழங்கினார். நபார்டு நிதி உதவி கீழ் வழி சோதனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ. 6.50 லட்ச மதிப்பில் சரக்கு வாகனம் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதியதாக துவக்கப்பட உள்ள வண்டிப்பாளையம் கிளையினை ஆய்வு செய்தார். மேலும் கடலூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அலுவலர் எழில்பாரதி மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.